சென்னையில் திடீரென பெய்த மழை..! சில்லென்ற காற்றில் ஜாலியாய் வீடு திரும்பும் மக்கள்..!

Published : Sep 06, 2019, 08:42 PM IST
சென்னையில் திடீரென பெய்த மழை..! சில்லென்ற காற்றில் ஜாலியாய் வீடு திரும்பும் மக்கள்..!

சுருக்கம்

வெப்ப சலனம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்து உள்ளது.

சென்னையில் திடீரென பெய்த மழை..! சில்லென்ற காற்றில் ஜாலியாய் வீடு திரும்பும் மக்கள்..! 

சென்னையில் கடந்த சில நாட்களாக திடீரென மாலை நேரத்தில் பெய்யும் மழையால்   மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

வெப்ப சலனம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்து உள்ளது.  குறிப்பாக சூளைமேடு வடபழனி கோயம்பேடு  பட்டினப்பாக்கம் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல 
 மழை பெய்தது.

அதேபோன்று ராயப்பேட்டை சென்னை மந்தைவெளி ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையில் அவ்வப்போது மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழையால் சென்னையே குளிர்ந்து விடுகிறது. சில்லென்று வீசும் காற்றில் வேலை முடித்து வீடு  திரும்புபவர்கள் இப்படி ஒரு அழகிய கிளைமேட்டை என்ஜாய் செய்தபடியே வீடு திரும்புகின்றனர்.

அதேவேளையில் சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மழை காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Heat Stroke: ஹீட் ஸ்ட்ரோக் எதனால் ஏற்படுகிறது? தடுக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ஈரப்பதத்தால் ஏற்படும் முடி சிக்குதலை கட்டுப்படுத்த லேசான ஹேர் ஆயில்கள்