ஹே.. ஜாலி...! தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் பயங்கர மழை..!

Published : Jul 19, 2019, 01:12 PM IST
ஹே.. ஜாலி...!  தமிழகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் பயங்கர மழை..!

சுருக்கம்

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி,நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது நகரின் பல பகுதிகளில் லேசான  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 10 செ.மீ மழையும், கல்லூரில் 9 செ.மீ மழையும், அரியலூர் புதுக்கோட்டையில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின்  தகவல் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Washing Machine Cover: கலர்ஃபுல்லான வாஷிங் மெஷின் கவர்கள்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?
Chanakya Niti: ரொம்ப நல்லவரா இருக்கிறது தப்பா? சாணக்கியர் சொல்லும் ரகசியம்!