தாறுமாறு வெயிலில்...13 மாவட்டத்தில் ஜில்லுன்னு மழை..! ஆஹா என்ன குளிர்ச்சி... என்ஜாய் செய்யும் மக்கள்...!

thenmozhi g   | Asianet News
Published : Apr 25, 2020, 04:11 PM IST
தாறுமாறு வெயிலில்...13 மாவட்டத்தில் ஜில்லுன்னு மழை..!  ஆஹா என்ன குளிர்ச்சி... என்ஜாய் செய்யும் மக்கள்...!

சுருக்கம்

 வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தாறுமாறு வெயிலில் ...13 மாவட்டத்தில் ஜில்லுன்னு மழை..!  ஆஹா என்ன குளிர்ச்சி... என்ஜாய் செய்யும் மக்கள்...!

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த வெப்பநிலைக்கு நடுவே தமிழக மக்களை குளிர்விக்க  சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒருவார காலமாகவே அதிகரித்துவரும் வெப்பத்தின் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கு மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் என்ற பகுதியில் ஆறு சென்டிமீட்டர் மழை பெய்தது. மேலும் தர்மபுரி, கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர், சேலம், திருச்சி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெயில் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக அதிக வெயில் காரணமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெரியவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மேலும் வெயில் காரணமாக வீட்டிற்குள்ளேயே புழுக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மழை  ஜில்லென்று வீசும் காற்றையும், மழை சாரலிலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!