தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை...! எங்கெல்லாம் அதிகமழை பெய்யப்போகுது தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Sep 18, 2019, 1:40 PM IST
Highlights

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை...!  கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதாம் மழை..! 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி சிவகங்கை பெரம்பலூர் திருவாரூர் கடலூர் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொருத்தவரையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய பகுதிகளிலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 புதுவை கடற்கரை பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 15 சென்டிமீட்டர் மழையும் கும்பகோணத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்

click me!