தேர்வு நடக்கும்... ஆனால் யாரும் பெயில் ஆக்க மாட்டோம்..! அமைச்சர் அதிரடி..! மாணவர்கள் டபுள் குஷி..!

Published : Sep 18, 2019, 01:01 PM IST
தேர்வு நடக்கும்... ஆனால் யாரும் பெயில் ஆக்க மாட்டோம்..! அமைச்சர் அதிரடி..! மாணவர்கள் டபுள் குஷி..!

சுருக்கம்

3 ஆண்டு காலத்தில் மாணவர்கள் தங்களுடைய அறிவு ஆற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளுவதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளது. 

தேர்வு நடக்கும்... ஆனால் யாரும் பெயில் ஆக்க மாட்டோம்..! அமைச்சர் அதிரடி..! மாணவர்கள்  டபுள் குஷி..!  

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் ஆனால் யாரும் பெயில் ஆக மாட்டார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர்பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ள பதிவில், ‘’5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற முறையில் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில், 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, 3 ஆண்டு காலத்தில் மாணவர்கள் தங்களுடைய அறிவு ஆற்றல் திறனை மேம்படுத்திக்கொள்ளுவதற்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இன்று எந்த நிலை உள்ளதோ இதே நிலை தான் அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு தொடரும்’ என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் ஆனால் யாரும் பெயில் ஆக மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதே வேளையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை செய்து முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு
மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்