ஆதார் கார்டுடன் மணமகனை அடிமையாக்கிய பெண்... 9.30 மணிக்கே பெட்ரூமை சாத்த உத்தரவு..!

Published : Sep 18, 2019, 12:19 PM IST
ஆதார் கார்டுடன் மணமகனை அடிமையாக்கிய பெண்...  9.30 மணிக்கே பெட்ரூமை சாத்த உத்தரவு..!

சுருக்கம்

திருமணம் செய்து கொண்ட மணப்பெண் மணமகனிடம் பத்து கட்டளைகளை விதித்து அதனை ஆதார் கார்டுடன் கையெழுத்து வாங்கி பேனர் அடித்து வைக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.   

கவுந்தம்பாடி, புதூரை சேர்ந்த ஸ்ரீதரை லாவண்யா திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவர் விதித்துள்ள 10 கட்டளைகளை பேனர் அடித்து ஒட்டப்பட்டிருந்து.  உன்னுடைய மனைவி நானாகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்கக்கூடாது. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்கக் கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்கக் கூடாது.  இரவு 8.30 மணிக்கு கிச்சன் க்ளோஸ். இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ். தேங்காய் எண்ணேய், ஷாம்பு, சோப்பு, துண்டு சொந்தமாய் எடுத்துக் கொண்டு போய் குளிக்க வேண்டும்.  அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது.

 

ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிடவேண்டும். தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியில் படுத்துக் கொள்ள வேண்டும். சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம். கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்சத் தண்ணி கூடக் கிடையாது. 

மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு சாட்சண்யமும் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும். முக்கியக் குறிப்பு என்னிடம் கோபப்பட்டால் எனது அண்ணன்களாகிய இருவரும் இருந்து தர்ம அடி விழும் என விதித்துள்ள கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறேன் என மணமகன் சம்மதித்து கையெழுத்து இட்டுக் கொடுத்துள்ளார். இந்த பேனர் புகைப்படங்களாக மாறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்