எங்கெல்லாம் பயங்கர மழை தெரியுமா ..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

By ezhil mozhiFirst Published Dec 7, 2019, 2:42 PM IST
Highlights

குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர்  வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

எங்கெல்லாம் பயங்கர மழை தெரியுமா ..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! 

குமரிகடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரம் பொருத்தவரை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதே போன்று நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குமரிகடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

click me!