வேலூர் காரர்களுக்கு ஒரு "ஓ" போடுங்க"..! தீண்டாமை கடைபிடிக்காத நல்ல மாவட்டம்...!

By ezhil mozhiFirst Published Dec 7, 2019, 1:58 PM IST
Highlights

ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறை தான் தீண்டாமை.இன்றைய கால கட்டடத்தில் என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் மனிதர்களின் மன நிலைமை மாறி விட்டதா என்றால்.. கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம். 

வேலூர் காரர்களுக்கு ஒரு "ஓ" போடுங்க"..! தீண்டாமை கடைபிடிக்காத நல்ல மாவட்டம்...!

தீண்டாமை கடைபிடிக்காத நல்ல மாவட்டம் வேலூர் மாவட்டம்  என்ற தகவல் வெளியாகி  உள்ளது.தீண்டாமையை கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தற்போது பெறப்பட்டு உள்ளது.

ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறை தான் தீண்டாமை.இன்றைய கால கட்டடத்தில் என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் மனிதர்களின் மன நிலைமை மாறி விட்டதா என்றால்.. கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம். 

அதிலும்  குறிப்பாக இன்றைய இளசுகள் பார்க்க அழகா, கண்ணுக்கு லட்சணமா, உலக வாழ்க்கை முறையை விரல் நுனியில் வைத்துக்கொண்டு வாய் நிறைய பகுத்தறிவு பேசினாலும், மனம் முழுக்க ஜாதி வெறியோடு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வெளிப்படையாக சொல்லிவிடாமல் அதனுடைய செய்கை மூலம் ஜாதி பாசம் கொண்டு வருவார்கள். 

அதனை அப்படியே தொழில் ரீதியாக முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று விடுவார்கள்... ஒரு பிரச்சனை என்றால் ஜாதி பாசம் ஒன்று சேர்க்க வைத்து விடும்... இது எதுவுமே அறியாதவன் தான் இக்கட்டான சூழ்நிலையில் கூட  தனிமைப்படுத்தப்படுவான்.

இப்படி ஒரு நிலையில், எஸ்.ஏ.எஸ். ஒய்  அமைப்பு, கடந்த 2014 முதல் 2018 வரையில் தீணடாமை கடைப்படிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கையை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி விவரம் கேட்டு உள்ளது. அதில் அதிக பட்சமாக திருவாரூர் மாவட்டம் முதல் இடத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டாவது இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்து உள்ளது.

மற்ற மாவட்டங்கள் விவரம் பின்வருமாறு ...

திருவாரூர் மாவட்டம்- 131 கிராமங்கள்,  கிருஷ்ணகிரி 35, விழுப்புரம் , சிவகங்கை , தூத்துக்குடி- 32 கிராமங்கள், நாகப்பட்டினம் 30, கடலூர் 29, ராமநாதபுரம் 24, நாமக்கல் 23, திண்டுக்கல் 22, தருமபுரி 18, விருதுநகர் 18, தேனி 18, கோயம்புத்தூர் 12, புதுக்கோட்டை 10, சேலம் 6, திருச்சி 5, நீலகிரி 3 கன்னியாகுமரி 2 கிராமங்கள் என மேற்குறிப்பிட்ட கிராமங்களில் தீண்டாமை  பின்பற்றப்படுவதாக தகவல் கிடைத்து உள்ளது. 

அந்த வகையில் சில  மாவட்டங்கள் இடம் பெற வில்லை என்றாலும் மிக மிக குறைந்த அளவில் மட்டுமே ஏதோ ஒரு சில இடங்களில் மட்டும் பார்க்கஓடிய மாவட்டமாக வேலூர் மாவட்டம் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தீண்டாமை கடைபிடிக்காத  மாவட்டமாக வேலூர் இருப்பதால், வேலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு  "ஓ" போடலாம் என்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள்

click me!