உங்களுக்கு கோபம் அதிகம் வருதா..? கட்டுப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை…செய்யக் கூடாதவை…

Anija Kannan   | Asianet News
Published : Feb 11, 2022, 12:05 PM IST
உங்களுக்கு கோபம் அதிகம் வருதா..? கட்டுப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை…செய்யக் கூடாதவை…

சுருக்கம்

அதீத கோபம் வந்தால், கட்டுப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 

கோபம் என்பது ஒரு கொடிய நோயாகும். சில சமயம், கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல்வேறு உடல் பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை ஏற்படும். இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி,  சில சமயங்களில் அதீத கோபத்தால் இறுதில் இறப்பை சந்திக்க நேரிடும். எனவே, கோபம் வந்தால் கட்டுப்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை தெரிந்துகொள்ளுங்கள். 

 அதிகமாகக் கோபப்படுபவர்கள், வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சுவாசிப்பதில் கவனம் செலுத்தலாம்.கோபம் ஏற்படும் சூழலில் மனதில் ஒன்று முதல் பத்து வரை எண்ண ஆரம்பியுங்கள். பின்னர், அதையே மீண்டும் பத்தில் இருந்து ஒன்று வரை ரிவர்ஸாக எண்ணவும். இந்தக் கால அவகாசம், உங்கள் மனநிலையைச் சற்று மாறச் செய்யும். இப்படி பத்து முறை செய்து பாருங்கள். கோபம் மட்டுமல்லாமல், பதற்றமும் பயமும்கூடக் குறைந்துவிடும்.
 
விரும்பத்தகாத சூழலில் கோபமான மனநிலையை மாற்றுவதற்காக, மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறிது நேரம் பேசலாம். நகைச்சுவை மற்றும் செல்லப் பிராணிகளின் வீடியோக்களை பார்ப்பதால், உடனடியாக மனம் மாறும். 

காரணமில்லாமல் கோபம் வருவது, அந்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியாமல் முரட்டுத்தனமாகச் செயல்படுவது போன்ற அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

மகிழ்ச்சியான சூழலும் மனநிலையும் வேண்டுமெனில், நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். எப்போதும் பாஸிட்டிவாக யோசியுங்கள்.

பசி, அசிடிட்டி, அல்சர், அதீதப் பசி, தலைவலி போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு அதிகக் கோபம் வரும். இவர்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதுவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாகச் சாப்பிடுவது நல்லது.

உணவுகளில் மாற்றம்:

கோபத்தை கட்டுப்படுத்த சில உணவுகளை, உண்பது ஒரு சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். அவை டிரான்ஸ் கொழுப்பின் அளவை அதிகரிக்க தூண்டுகோலாக இருக்கலாம்.

முடிந்தவரை இயற்கையான முறையில் உணவை உண்ணுங்கள். உதாரணமாக, பழச்சாறுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுங்கள். மீன், கோழி, முட்டை, பச்சை காய்கறிகள் போன்ற டோபமைன் உணவுகளை உண்ணுங்கள்.

மீன், அக்ரூட் பருப்புகள், காளான்கள், விதைகள் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். பாதாம், கீரை, பூசணி விதை, சூரியகாந்தி விதை போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இது நன்றாக தூங்கவும் உதவும்.

உலர்ந்த பழங்கள் மற்றும் சிப்ஸ்:

இவற்றின் வெப்பம் காரணமாக, அவை எளிதில் நம்மை ஆக்ரோஷமாக மாற்றும். நீங்கள் அவற்றை உட்கொள்ள விரும்பினால், உலர்ந்த பழங்களை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அவற்றை சாப்பிடுங்கள்.

தவிர்க்க  வேண்டியவை:

முடிந்தவரை சர்க்கரை அல்லது இனிப்பு பொருட்களின் அளவை குறைத்துக்கொள்வது நல்லது. வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்கவும். இதற்கு கொழுப்பு நிறைந்த மீன், முட்டை அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.எனவே, நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்