
உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம்.
முன்பெல்லாம், நம் முன்னோர்கள் வழி திருமணத்திற்கு தயாராகும் பெண்கள், குனிந்த தலை நிமிராமல் வந்து மணமேடையில் உட்காருவார். அந்த காலம் எல்லாம் தற்போது, மலையேறிவிட்டது. இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், மணமேடைக்கு வரும் போதே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான். ஒரே தூள் கிளப்பும். இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது, மணப்பெண் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது புஷ்பா திரைப்படம். புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், மற்ற பிரபலங்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், ஊ சொல்றியா மாமா, ஸ்ரீவள்ளி, சாமி ஆகிய பாடல்கள் ஆகியவற்றிற்கு, அந்த படத்தில் இடம்பெற்றபடியே நடித்து ரசிகர்களும், நடிகர்களும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது ஒரு திருமண விழாவில், ஒரு ஜோடி, 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் பாரம்பரிய மராட்டிய உடையை அணிந்திருப்பதைக் காண முடிகிறது. மாலை மாற்றும் சடங்கின் போது, இருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து அந்த பாடலின் துடிதுடிப்பான இசைக்கு ஏற்றவாறு நடனமாடுவதை வீடியோவில் காண்கிறோம். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.