Aval Dosai : காலை உணவாக..புது விதமான ஸ்டைலில் 'அவல் அவல் தோசை'.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Apr 18, 2024, 7:00 AM IST

காலை உணவாக, அவலை வைத்து இந்த புது விதமான ஸ்டைலில் அவல் தோசை எப்படி செய்வது என்று கற்றுக் கொள்வோம். 


உங்கள் வீட்டில் தினமும் காலை இட்லி சப்பாத்தி, பூரி, தோசை செய்து செய்து போர் அடித்து விட்டதா..? அப்ப உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் ஒரு ஸ்பெஷல் டிஸ் பற்றி பார்க்கலாம். அது வேறு எதும் இல்லங்க..'அவல் தோசை' தான்.

அவல் நன்மைகள் பற்றி சொல்லத் தேவையே இல்லை. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும்.மேலும் இது எளிதில் ஜீரணமாகும் மற்றும் இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதில் கலோரிகள் குறைவாகவும் இரும்புச்சத்து நிறைந்தும் உள்ளது.

Latest Videos

பொதுவாகவே சிலர் தங்களது வீடுகளில் அவலில் உப்புமா, ஸ்வீட் போன்றவற்றை செய்வார்கள். ஆனால் நாம் ஆரோக்கியமான அவல் தோசை பற்றி பார்க்கலாம்.. இவை காலை உணவிற்கு ஏற்றவை. மேலும் இந்த ரெசிபியை குறைந்த நேரத்திலேயே செய்து முடித்திடலாம். இந்த அவல் தோசை செய்வதற்கு எந்த வகையான அவலையும் பயன்படுத்தலாம். சரி வாங்க இப்போது அவலை வைத்து இந்த புது விதமான ஸ்டைலில் அவல் தோசை எப்படி செய்வது என்று கற்றுக் கொள்வோம். 

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1கப்
அவல் -1கப்
உளுந்தம் பருப்பு - 1/4கப் 
வெந்தயம் - 1ஸ்பூன் 
தயிர் - 1கப் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

  • அவல் தேசை செய்வதற்கு முதலில், ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் அவல் இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • அவை நன்கு ஊறிய பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். இவற்றுடன், பச்சை மிளகாய் மற்றும் மோர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். 
  • இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய், சூடானதும் அதில் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த மாவில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள். பின் மாவில் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அவ்வளவு தான் இப்போது அவல் தோசை மாவு ரெடி.. எனவே, தோசை சுடலாம் வாங்க..
  • தேசை சுட முதலில், தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும். பிறகு அதில் எண்ணெய் விட்டதும், தயாரித்து வைத்த மாவை ஊற்றி வட்ட வடிவில் சுற்றி கொள்ளுங்கள். மேலும் தேசையின் ஓரம் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வையுங்கள். அவ்வளவுதான் இப்போது சுவையான ருசியில், சத்தான அவல் தோசை ரெடி...இவற்றுடன் நீங்கள் தேங்காய் சட்னி, சாம்பார், புதினா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். கண்டிப்பாக ஒருமுறையாவது இந்த ரெசிபியை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
click me!