Peanut Dosa : அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான காலை உணவு 'வேர்க்கடலை தோசை'.. ரெசிபி இதோ!!

By Kalai Selvi  |  First Published Apr 17, 2024, 7:30 AM IST

இன்று காலை சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு சாப்பிட விரும்பினால் வேர்க்கடலை தோசை செய்து சாப்பிடுங்கள். மிகவ சுலபமாக செய்யலாம். ரெசிபி இங்கே...


பொதுவாகவே, பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் வாழும் நாம் சிலர் சமயத்தில் சத்தான உணவுகளை சாப்பிட முடியாமல் போகலாம். வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்றவையே சிலரக்கு காலை உணவாகும். இவை சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை உண்டாகும். எனவே இவற்றை ஒருபோதும் காலை உணவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில் காலை உணவு அந்த நாளின் ஒரு முக்கிய பங்காக வகிக்கிறது. எப்படியெனில், நாம் முழு ஆற்றலுடன் வேலை செய்யவும், அதற்காக உங்களை தயார்படுத்தவும், உடலுக்கு தேவையான அதிகபட்ச ஆற்றல்களை காலை உணவுதான் வழங்குகிறது. இதனால்தான் காலை உணவு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுடன் உங்கள் நாளை தொடங்கினால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். சரி, இன்று உங்கள் காலை உணவை ஆரோக்கியமாக தொடங்க விரும்பினால் 'வேர்க்கடலை தோசை' செய்து சாப்பிடுங்கள்.

Latest Videos

வேர்க்கடலையில் புரதம், நல்ல கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாகவே இதில் நாம் இனிப்பு பண்டம் அல்லது மிட்டாய் கார சட்னி செய்து சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் இன்று வித்தியாசமான முறையில் ஆரோக்கியமான வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை (வறுத்து தண்ணீரில் ஊறவைத்தது) - 1/2 கப்  
தண்ணீர் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சின்னது
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

  • இதை செய்ய முதலில் மிக்சி ஜாரில் ஊறவைத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.
  • பிறகு அந்த மாவில், உளுத்தம்பருப்பு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம், தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.
  • இப்போது,  தோசை சுட ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.  பிறகு அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் மாவு ஊற்றி, கரண்டியால் சுற்றி பரப்புங்கள்.
  • பிறகு தோசையைச் சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். பொன் நிறமாக மாறியதும் புரட்டி போட்டு, மீண்டும் வேக வைக்கவும். அவ்வளவுதான் இப்போது சத்தான மற்றும் சுவையான வேர்கடலை தோசை ரெடி!!
  • சூடாக இருக்கும் இந்த தோசையுடன் இந்த தோசை உடன் தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். கண்டிப்பாக இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள்..
click me!