1 கப் கோதுமை மாவு இருக்கா..?!காலை டிபனுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. சுவை டக்கரா இருக்கும்!

By Kalai Selvi  |  First Published May 31, 2024, 7:30 AM IST

காலை டிபனுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான முட்டை கோதுமை தோசை செய்வது எப்படி என்று இந்த பதிவு தெரிந்து கொள்ளுங்கள்.


பொதுவாக இல்லத்தரசிகள் பலர் காலை டிபனுக்கு உணவாக என்ன செய்ய வேண்டும் என்று குழப்பம் இருக்கும். வீட்டில் இட்லி, தோசை மாவு இருந்தால் சமாளித்து விடுவார்கள். ஒருவேளை, அது இல்லை என்றால் அவ்வளவுதான். இன்று உங்களுக்கு இந்த நிலைமை தானா..? அச்சோ வீட்ல இட்லி மாவு இல்லை என்று கவலைப்படாதீங்க.. உங்க வீட்ல கோதுமை இருக்கா..? அட்டகாசமான சுவையில் ஒரு ரெசிபி செய்யலாம்.

என்னங்க வெறும் கோதுமை தோசை தானே என்று நினைக்கிறீங்களா..? ஆனா அதுதான் இல்ல. கோதுமை மாவுடன் முட்டையும், சில பொருட்களையும் சேர்த்து தோசை சுட்டால் அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த தோசை செய்வதற்கு மிகவும் எளிது. இந்த தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் காலை டிபனுக்கு சுவையான முட்டை கோதுமை தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

முட்டை கோதுமை தோசை தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப் 
தேங்காய் - 1/4 கப் (துருவிய)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
முட்டை - 1
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
சீரகம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) 
உப்பு - சுவைக்கேற்ப 
எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - 3/4 கப்

செய்முறை: 
இந்த ரெசிபி செய்ய முதலில், எடுத்து வைத்த கோதுமை மாவு, துருவிய தேங்காய் முட்டை, மஞ்சள் தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம், 3/4 கப் அளவு தண்ணீர் மற்றும் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

 இப்போது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் தட்டி கொள்ளுங்கள் மாவு ஒரு வேளை கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதில் சீரகம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது தோசை சுடுவதற்கான மாவு தயார்.

தோசை சுடுவதற்காக தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் அதில் என்னை தடவி பின் ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றி வட்டமாக சுற்றிக் கொள்ளுங்கள். தோசை சீக்கிரமாக வேக தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு வேகவைத்து எடுத்தால், ருசியான முட்டை கோதுமை தோசை ரெடி..!! இந்த தோசைக்கு நீங்கள் சைடிஷ் ஆக கார சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

இந்த ரெசிபி ஒருமுறை உங்களது வீட்டில் செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

click me!