Anant Ambani Wedding : பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் தான் முகேஷ் அம்பானி. இவருடைய இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் அவர்களுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயம் முடிந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு முன்னதான நிகழ்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையதில் வருகின்ற ஜூலை மாதம் 12ம் தேதி இவர்களுடைய திருமணம் நடக்கவுள்ளது. "திருமதி கோகிலாபென் & ஸ்ரீ திருபாய் அம்பானி, ஸ்ரீமதி பூர்ணிமாபென் மற்றும் ஸ்ரீ ரவீந்திரபாய் தலால் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன், எங்கள் மகன் அனந்த் மற்றும் ஸ்ரீமதி ஷைலா மற்றும் ஸ்ரீ வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகாவின் சங்கமத்தை கொண்டாட உங்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அந்த திருமண அழைப்பிதழில் எழுதப்பட்டுள்ளது.
ராதிகாவுடன் ‘க்ரூஸ் டிரிப்’ செல்லும் ஆனந்த் அம்பானி! கண்டிஷன் போட்டு விருந்தினர்களுக்கு அழைப்பு!
ஜூலை 12, ஜூலை 13 மற்றும் ஜூலை 14 ஆகிய மூன்று தேதிகளில் அவர்களுடைய திருமண நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள பிகேசியில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் அவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது. பாரம்பரிய இந்து வேத முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.
முக்கிய திருமண சடங்குகள் வெள்ளிக்கிழமை, 12 ஜூலை அன்று, புனிதமான ஷுப் விவா அல்லது திருமண விழாவுடன் தொடங்கும். அதே போல ஜூலை 13ம் தேதி சனிக்கிழமை, சுப் ஆஷிர்வாத் அல்லது தெய்வீக ஆசீர்வாதங்களின் நாளாக இருக்கும். மேலும் இறுதியாக ஜூலை 14ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மங்கள் உத்சவ் எனப்படும் திருமண வரவேற்பு நடைபெறும் .
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவைக் கொண்டாட அம்பானி குடும்பத்தினர் இத்தாலியில் இருந்து பிரான்சின் தெற்குப் பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். ஷாருக்கான், ரன்வீர் சிங், ஜான்வி கபூர், அனன்யா கபூர், ஓரி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த திருமணத்திற்கு முந்தின விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை!