குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிங்க் சாஸ் பாஸ்தா எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு வீட்டில் இருப்பதால், அவர்களுக்கு ஏதாவது சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா..? ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லையா..? கவலைப்படாதீங்க... இந்த பதிவு உங்களுக்கானது தான்..
ஆம்.. பொதுவாகவே, குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள், பீட்சா, பர்கர், பாஸ்தா போன்றவை ரொம்பவே பிடிக்கும். அதிலும் குறிப்பாக பாஸ்தா என்றாலே நம் அனைவருக்கும் பிடித்தது. குழந்தைகள் பாஸ்தாவை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கடைகளில் பாஸ்தா வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால், அது உடல் நலத்திற்கு கேடு. அந்த வகையில் உங்கள் குழந்தைக்கு ரொம்பவே, பிடித்த டேஸ்டான பிங்க் பிங்க் சாஸ் பாஸ்தா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த பாஸ்தாவை நீங்கள் ஈவினிங் டைம்ல கூட குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
இதையும் படிங்க: வீட்டுல பாஸ்தா இருந்தா குழந்தைகளுக்கு டிபனாக இப்படி செஞ்சி கொடுங்க..விரும்பி சாப்பிடுவாங்க..!
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 3 கப்
தக்காளி - 8
வெண்ணெய் - 75 கிராம் (உப்பு இல்லாதது)
எண்ணெய் - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
சிவப்பு குடைமிளகாய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
ஸ்வீட் சோளம் - 1 கப் (வேகவைத்தது)
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சில்லி ஃபிளக்ஸ் - 1 ஸ்பூன்
இத்தாலியன் சீசனிங் - 2 ஸ்பூன்
மைதா - சிறிதளவு
பால் - 1 கப்
தக்காளி கெட்சப் - 1 ஸ்பூன்
பேப்ரிக்கா பவுடர் - 1 ஸ்பூன்
சீஸ் துண்டுகள் - 4
துளசி இலை - 4
இதையும் படிங்க: குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த "முட்டை பாஸ்தா"! இந்த மாதிரி கொடுங்க
செய்முறை:
பிங்க் சாஸ் பாஸ்தா செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த பாஸ்தாவை போடுங்கள். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வையுங்கள். குறைந்தது 10 - 15 நிமிடம் பாஸ்தா கொதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்தா நன்றாக வென்றதும் அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து, வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் எடுத்து வைத்த தக்காளியை இரண்டாக கீரி கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வையுங்கள். பிறகு தக்காளியிலிருந்து அதன் தோலை நீக்கி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு வாணிலியை அடுப்பில் வைத்து எடுத்து வைத்த வெண்ணையை சேர்க்கவும். வெண்ணெய் நன்கு உருகியதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் சேருங்கள். பிறகு இதில் பொடியாக நறுக்கி வைத்த பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் நறுக்கிய பச்சை குடைமிளகாய் மற்றும் சிவப்பு குடைமிளகாய் சேர்த்து ஒரு ரெண்டு நிமிடம் வதக்குங்கள். பின்பு வேகவைத்த ஸ்வீட் சோளம் இதனுடன் சேர்ந்து நன்கு கிளறவும். மேலும் இதனுடன் உப்பு, மிளகு தூள், சில்லி ஃப்ளக்ஸ், இத்தாலியன் சீசனிங் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். இதனை எடுத்து இதில் மைதா சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளுங்கள்.
பின் எடுத்து வைத்த பாலை ஊற்றி நன்கு கலந்து விடுங்கள். அடுத்ததாக அரைத்து வைத்த தக்காளி விழுதையும் இதனுடன் சேர்த்து கலக்கவும். அதன்பிறகு தக்காளி ஸ்கெட்ச் பேப்ரிக்கா பவுடர், சேர்த்து வேகவிடுங்கள். பின் அதில் சீஸ் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவை அதில் சேர்த்து ஒருமுறை களறிவிடுங்கள். கடைசியாக துளசி இலையை மேலே தூவி இறக்கினால், சுவையான பிங்க் சாஸ் பாஸ்தா ரெடி..!!!
இந்த ரெசிபியை ஒரு முறை உங்களது வீட்டில் செய்து பார்த்து சுவை எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்...
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D