எப்பவும் இட்லிக்கு தோசைக்கு சட்னி தானா..?! ஒருமுறை இந்த குருமா ட்ரை பண்ணுங்க.. அட்டகாசமாக இருக்கும்!

By Kalai SelviFirst Published May 29, 2024, 6:59 PM IST
Highlights

இட்லி தோசைக்கு அட்டகாசமான சுவையில் குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னைக்கு நைட்டு சாப்பாடுக்கு உங்கள் வீட்டில் இட்லி (அ) தோசை செய்யப் போகிறீர்களா..? பொதுவாகவே இட்லி தோசை என்றாலே பலரது வீடுகளில் சாம்பார், சட்னி தான் இருக்கும். எப்பவுமே இப்படி சாப்பிட்டு உங்களுக்கு போரடித்திருந்தால், ஒரு முறை இந்த குருமாவை செய்யுங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.

இன்று இரவு இந்த குருமா செய்து கொடுத்தால், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்பவும் சாப்பிடும் அளவை விட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவார்கள், அந்த அளவிற்கு அதன் சுவை வேற லெவல் இருக்கும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் இட்லி தோசைக்கு குருமா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  இன்று டின்னருக்கு இந்த இன்ஸ்டன்ட் ரெசிபி செய்து பாருங்க.. சுவை சும்மா அள்ளும்!

குருமா செய்ய தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு..

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 6 பல்
இஞ்சி - 3 துண்டு
சோம்பு - 1 ஸ்பூன் 
தேங்காய் - 1/4 மூடி ( துருவியது)
முந்திரி (அ) பொட்டுக்கடலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

குருமா செய்வதற்கு..
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 5
அன்னாசிப் பூ - 1
கல்பாசி - சிறிது
பிரியாணி இலை - 2
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைகேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:   இட்லி, தோசைக்கு எப்பவுமே சட்னி வைக்கிறீங்களா? ஒரு முறை வேர்க்கடலை வச்சி இந்த கிரேவி செஞ்சு பாருங்க..

செய்முறை:
இட்லி (அ) தோசைக்கு குருமா செய்வதற்குமுதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பிறகு அதில் துருவிய தேங்காய் மற்றும் முந்திரி அல்லது பொட்டுக்கடலை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு, அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள். நன்கு ஆறிய பிறகு அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் எடுத்து வைத்த பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ கல்பாசி பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இதனுடன் தக்காளி மற்றும் உங்கள் தேவைக்கேற்ப உறுப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். தக்காளி நன்கு மென்மையாக வந்த பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறுங்கள். பிறகு அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். மசாலாவில் பச்சை வாசனை போன பிறகு அதில் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை தூவி இறக்கினால்  இட்லி தோசைக்கு அட்டகாசமான சுவையில் குருமா ரெடி!!

இந்த ரெசிபியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!