இந்த கட்டுரையில், காலை உணவாக பீட்ரூட் பணியாரம் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாகவே, பலரது வீடுகளில் தினமும் காலை உணவாக இட்லி, தோசை இருக்கும். இதை சாப்பிட்டு உங்களுக்கு போரடித்துவிட்டதா..? சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமாகவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காலை உணவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்காக தான்.
ஆம்.. உங்கள் வீட்டில் பீட்ரூட், இட்லி தோசைக்கு பதிலாக சூப்பரான சுவையில் காலை உணவாக பணியாரம் செய்து சாப்பிடுங்கள். என்னது பீட்ரூட் பணியாரமா..? என்று நீங்கள் யோசிக்கிங்களா..? கவலைப்படாதீங்க.. இந்த ரெசிபி செய்வது ரொம்பவே ஈசி. சரி வாங்க இப்பொழுது இந்த கட்டுரையில், பீட்ரூட் பணியாரம் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: இட்லி, தோசைக்கு எப்பவுமே சட்னி வைக்கிறீங்களா? ஒரு முறை வேர்க்கடலை வச்சி இந்த கிரேவி செஞ்சு பாருங்க..
பீட்ரூட் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
தயிர் - 2 ஸ்பூன்
பீட்ரூட் - 1 (துருவியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
சோடா உப்பு - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா?! இந்த மாதிரி கிரேவி செய்ங்க.. இட்லி தோசைக்கு செம்மையா இருக்கும்!
செய்முறை:
இந்த பீட்ரூட் பணியாரம் செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அவற்றை நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். இப்போது இதில், எடுத்து வைத்த பீட்ரூட், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து, அதில் இஞ்சி, தயிர், உப்பு மற்றும் சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.
பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு மாவை கலக்குங்கள். அவ்வளவு தான் பீட்ரூட் பணியாரம் செய்வதற்கான மாவு தயார். இப்பொழுது, அடுப்பில் பணியாரக் கல்லை வையுங்கள். பின் ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும், கலக்கி வைத்த மாவை குழிகளில் ஊற்றி, இருபக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுங்கள். இப்போது டேஸ்டான பீட்ரூட் பணியாரம் ரெடி!! சைடிஷ் ஆக தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D