இந்த பதிவில், இட்லி, தோசை சப்பாத்திக்கு அட்டகாசமான சுவையில் வேர்க்கடலை கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்னைக்கு காலையில உங்க வீட்ல இட்லி, தோசை அல்லது சப்பாத்தி இதுல ஏதாவது ஒன்னு செய்றீங்களா? அதுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடிஸ் தான் செய்றீங்களா..? ஆனா, இன்னைக்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அவர்கள் சாப்பிடாத ஏதாவது ஒரு சைடு டிஷ் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா..? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்..
உங்க வீட்டில வேர்க்கடலை இருக்கா..? அப்படி இருந்தால் வேர்க்கடலையில் ஒரு சூப்பரான கிரேவி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த வேர்க்கடலை கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில் வேர்க்கடலை கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
வேர்க்கடலை கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப் (வறுத்தது)
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
முந்திரி - 7
ஏலக்காய் - 1
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
தேங்காய் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - சுவை கேற்ப
கொத்தமல்லி, கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலை கிரேவி செய்ய முதலில், எடுத்து வைத்த வேர்க்கடலை, ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுங்கள். இதனை அடுத்து ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி தேங்காய் முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, கொள்ளுங்கள். நன்கு வதங்கிய பிறகு அதை ஆற வையுங்கள்.
மறுபுறம், மிக்ஸி ஜாரில் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் வதக்கியதை இதனுடன் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் பச்சை மிளகாய், கருவேப்பிலை, ஏலக்காய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கழித்து பொறியாக நெருக்கே வெங்காயத்தையும் கொஞ்சமாக உப்பையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து இதில் வேக வைத்த வேர்க்கடலையையும், அரைத்து வைத்த மசாலா பேஸ்ட்டையும் சேர்த்து ஒரு முறை கிண்டி விட்டு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக வையுங்கள். இப்போது அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் வேர்க்கடலை கிரேவி ரெடி!!
இந்த ரெசிபியை ஒரு முறை உங்களது வீட்டில் செய்து பார்த்து.. எப்படி இருந்தது என்று உங்களது பதிலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..