இன்று உங்கள் வீட்டில் இட்லி மாவு இல்லையா..? இன்று டின்னருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையா..? கவலையை விடுங்க உங்களுக்கான பதிவு தான் இது..
பொதுவாகவே, தென்னிந்தியாவில் எல்லாருடைய வீடுகளிலும் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் தான் இருக்கும். இவை மிகவும் பிரபலமானதும் கூட. ஆனால், இந்த மூன்று உணவுகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?
அது வேற ஏதுமில்லைங்க.. இவை அனைத்தும் அரிசி உளுந்து மாவில் தான் தயாரிக்கப்படுகிறது. மேலும், உடனே அரைத்த மாவில் இட்லியும், இரண்டு மூன்று நாட்கள் கழித்து புளித்து இருக்கும் அந்த மாவில் தோசையும் சுட்டு சாப்பிடலாம். ஆனால், எல்லா நேரங்களிலும் நம்முடைய வீடுகளில் இட்லி மாவு இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த வகையில், இன்று உங்கள் வீட்டில் இட்லி மாவு இல்லையா..? இன்று டின்னருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையா..? கவலையை விடுங்க உங்களுக்கான பதிவு தான் இது..
ஆமாங்க.. உங்க வீட்ல அரிசி மாவும், ரவையும் இருந்தாலே போதும்.. மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட் டின்னர் ரெசிபியை கொண்டுவந்துள்ளோம். இதை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க. இப்போது அந்த இன்ஸ்டன்ட் டின்னர் ரெசிபி எப்படி செய்வது என்று இந்த கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளலாம்..
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கு 'இந்த' இட்லி வரப்பிரசாதம்.. உடனே செஞ்சு சாப்பிடுங்க!
இன்ஸ்டன்ட் டின்னர் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 200 கிராம்
ரவை - 5 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
தயிர் - 3 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - சின்ன துண்டு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: வெறும் அரிசி மாவுல எத்தனை நாளுக்கு தோசை சுடுவீங்க?! இந்த தோசையை சுடுங்க.. 'ஊட்டச்சத்து' எக்கச்சக்கம்!!
செய்முறை:
இன்று இன்ஸ்டன்ட் டின்னர் செய்வதற்கு முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைத்த அரிசி மாவை போடுங்கள். பிறகு இதனுடன், ரவை, சீரகம், பெருங்காயம், தயிர் சுவைகு ஏற்ப உப்பு, துருவிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் நன்கு கலக்குங்கள். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலக்குங்கள். இப்போது அதை மூடி வைத்து சுமார் 10-15 நிமிடங்கள் வரை நன்கு ஊற வையுங்கள்.
இதனை அடுத்து அடுப்பில் குழிப்பணியாரம் செய்யும் கடாயை வைத்து சூடாக்கவும். அது நன்றாக சுட்டதும், அதன் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் கலக்கி வைத்த மாவை ஊற்றி மிதமான சூட்டில் வேக வையுங்கள். இப்போது அதை பிரட்டி போட்டு வேகவைத்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் இன்ஸ்டன்ட் டின்னர் ரெடி!!
இவற்றுடன் உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இந்த ரெசிபியை ஒருமுறை உங்களது வீட்டில் செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று, உங்களது கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D