உங்கள் கணவருக்கு உங்களுடன் உடலுறவு கொள்ள விரும்பவில்லை என்றால், அதற்கு காரணங்கள் அவரிடமோ அல்லது உங்களிடமோ இருக்கலாம். நீங்கள் அதை கண்டுபிடித்தால், தீர்ப்பது எளிது.
சில சமயங்களில் உங்கள் கணவன், உங்களிடம் உடலுறவு கொள்ளவதில்லை. இதற்கு, வேலை சோர்வு போன்றவை காரணமாக இருந்தாலும், இது மீண்டும் மீண்டும் நடக்குதா..? குறிப்பாக, உங்கள் கணவர் எந்த காரணமும் இல்லாமல் உங்களுடன் உடலுறவு கொள்ள மறுத்தால் நிச்சயமாக மறைமுக பல காரணங்கள் உள்ளன. அது என்னென்ன என்பதை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உங்கள் அணுகுமுறையை சரிபார்க்கவும்: நீங்கள் எவ்வளவு தான் ஆசையாக இருந்தாலும், கவர்ச்சியாக உடை அணிந்தாலும், உங்களது அணுகுமுறை சரியாக இல்லாவிட்டால் உங்கள் கணவருக்கு உங்களுடன் செக்ஸ் வைக்க பிடிக்காது. அதுபோல, இந்த விஷயத்தில், எப்பொழுதும் குறை கூறுவது, நச்சரிப்பது மற்றும் விமர்சிப்பது ஆண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.
undefined
மன அழுத்தத்தை புரிந்து கொள்ளுங்கள்: உங்கள் கணவருக்கு மன அழுத்தமாக இருக்கும் சமயத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் அவர் மீதும் திணிக்காதீர்கள். மேலும் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, அவரது ஆண்குறி நிமிர்ந்து இருக்காதாம். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் டென்ஷனும் காமமும் எப்போதும் ஒன்று சேராது.
சுத்தமாக இருங்கள்: உடலுறவுக்கு உடலின் தூய்மையும் அவசியம். நீங்கள் சுத்தமாக இல்லாமல், உங்கள் கணவரை முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார்.
ஆபாசத்திற்கு அடிமை: உங்கள் கணவன் ஆபாசத்திற்கு அடிமையாக இருந்தாலோ அல்லது சுயஇன்பத்திற்கு அடிமையாக இருந்தாலோ, உங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது அரிது. எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்பவே கவனமாக இருங்கள் மற்றும் அதிலிருந்து அவர் மீண்டு வர நீங்கள் துணையாக இருங்கள்.
அன்பாக பேசுங்கள்: நீங்கள் உங்கள் கணவரிடம் அன்பாக பேசாமல் கடுமையான தொனியில் பேசினால் அவர் உங்களை நேசிப்பது கடினம். இதனால் உங்களுக்கு செக்ஸ் நடக்காது. உங்களை விட்டு தூரமாக இருப்பார். எனவே, அன்பாக பேசி பழகுங்கள். அப்போதுதான் அருவருக்குள் தீப்பொறி பற்றும்.
இப்படி நடந்து கொள்ளாதீர்கள்: பல மனைவிகள் தங்கள் கணவரின் சாதனைகள் முன்னேற்றத்தை நிராகரிக்கிறார்கள். ஆனால், இன்பத்தை மட்டும் பெற விரும்புகிறார்கள். இப்படி இருந்தால் கணவன் எப்படி வருவான்?
இன்னொருவரை புகழ்ந்து பேசுவது: நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலத்தையோ தந்தையோ சகோதரனையோ அல்லது உங்கள் தோழியின் கணவரையோ எப்போதாவது புகழ்ந்து பேசும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். இது உங்கள் கணவரின் ஈகோவை காயப்படுத்தும். இதனால் அவர்களுக்கு உங்கள் மீதுள்ள ஈர்ப்பு குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்: நீங்கள் உங்கள் கணவரை பொது இடத்தில் அவமதித்தாலோ அல்லது பிறரது முன்னிலையில் தாழ்த்தி பேசினாலோ அவர் உங்களை விட்டு விலகி விடுவார். ஜாக்கிரதை!!
இந்த தவறு செய்யாதீங்க! நீங்கள் உங்கள் கணவரிடம் உடல்நிலை சரியில்லாத போல் நடிப்பதே அவர் கண்டுபிடித்து விட்டால் அவருக்கு உங்கள் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் விரைவில் அவர் உங்களை வெறுத்து விடுவார் எனவே இந்த மாதிரி தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.