இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய இட்லி உப்புமா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே, இல்லத்தரசிகளுக்கு காலை டிபன் செய்வது பெரும் பாடாகவே இருக்கும். காரணம் காலை உணவு ரொம்பவே முக்கியம் என்பதால், அவர்கள் செய்யும் உணவு ஆரோக்கியமாகவும், குறிப்பாக குழந்தைகள் விரும்பும் சாப்பிடும் உணவாக இருக்க வேண்டும். அப்படி இன்று காலை உணவாக என்ன செய்வதென்று தெரியவில்லையா..? உங்களுக்கான ஒரு சூப்பரான ரெசிபி கொண்டு வந்துள்ளோம்.
நம்மில் பலருக்கு உப்புமா என்றாலே பிடிக்கவே பிடிக்காது. ஆனால், இட்லி உப்புமா பற்றி சொல்லவே வேண்டாம். ஆமாங்க, இந்த இட்லி உப்புமா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். உங்க வீட்ல ராத்திரி அவிச்ச இட்லி மீதி இருந்தா இந்த இட்லி உப்புமா செய்யலாம். கண்டிப்பா உங்க குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த இட்லி உப்புமா எப்படி செய்வது என்று தெரிஞ்சுக்கலாம்.
இதையும் படிங்க: உங்க வீட்டுல பீட்ரூட் இருக்கா..?! டேஸ்டான டிபன் செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!
இட்லி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி - 10
பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் பொடி - அரை சிட்டிகை
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: இட்லி, தோசைக்கு எப்பவுமே சட்னி வைக்கிறீங்களா? ஒரு முறை வேர்க்கடலை வச்சி இந்த கிரேவி செஞ்சு பாருங்க..
இட்லி உப்புமா செய்யும் முறை:
இட்லி உப்புமா செய்ய முதலில், எடுத்து வைத்த இட்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கி கொள்ளுங்கள். இப்போது இதனுடன் உதிர்த்த இட்லியை போட்டு கிண்டி கொள்ளுங்கள். பிறகு உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பை சேர்ந்து இரண்டு நிமிடம் கிண்டவும். இப்பொழுது, சுவையான இட்லி உப்புமா ரெடி!!
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D