டேஸ்டான வெஜிடபுள் புட்டு ; கண்டிப்பாக ஒருமுறை ட்ரை பண்ணுங்க.. செமையா இருக்கும்.. ரெசிபி இதோ!!

By Kalai SelviFirst Published Apr 19, 2024, 7:30 AM IST
Highlights

இன்று ஆரோக்கியமாகவும் சாப்பிடுவதற்கு சுவையான வெஜிடபிள் புட்டு எப்படி செய்வது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்க வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான காலை உணவை பண்ணுகிறீர்களா...? வித்தியாசமான முறையில் எளிதாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி நீங்கள் விரும்பினால் 'வெஜிடபிள் புட்டு' ட்ரை பண்ணுங்க. இதன் சுவை நிச்சயமாக அருமையாக இருக்கும். 

பொதுவாகவே புட்டு என்றாலே, வீட்டிலும் சரி கடைகளிலும் சரி ஒரே மாதிரியாக தான் இருக்கும். எனவே, நீங்கள் இன்று இந்த வெஜிடபிள் புட்டு கண்டிப்பாக செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு இதன் சுவை அற்புதமாக இருக்கும். சரி வாங்க இப்போது வெஜிடபிள் புட்டு எப்படி செய்வது என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - 1(சின்னது)
கேரட் - 1(சின்னது)
அரிசி மாவு - 1கப் (100 கிராம்
பீன்ஸ் - 4
பூண்டு - 5 
பச்சை மிளகாய் - 2
பச்சை பட்டாணி - 25கிராம்
காலிஃபிளவர் - 1/4கப்
மிளகாய்த் தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/2ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
கடலை எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெந்நீர் - தேவையான அளவு
தண்ணீர் - கொஞ்சமாக (தேவைப்பட்டால் மட்டுமே)
 
 செய்முறை:

  •  வெஜிடபிள் புட்டு, செய்ய முதலில் எடுத்து வைத்த காய்கறிகளை தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளுங்கள். பின் அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். என்னை நன்கு சூடானதும் அதில் கடுகு போட்டு பெரிய விடவும். இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • இப்பொழுது, காய்கறிகள் ஓரளவிற்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது அதனுடன் அரிசி மாவு, உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து, உதிரியாகக் கலந்து கொள்ளுங்கள்.
  • பிறகு இந்த காய்கறி மற்றும் அரிசி மாவு கலவையை இட்லி குக்கர் அல்லது புட்டு மேக்கரில் போட்டு 10 நிமிடங்கள் வேகவையுங்கள். அவ்வளவுதான் இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான காய்கறி புட்டு ரெடி..!! இதனுடன் நீங்கள் தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றவாறு வைத்துச் சாப்பிடுங்கள். கண்டிப்பாக இந்த டிஷை ஒரு முறையாவது உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்...
click me!