வீட்டில் ஊதுபத்தியை பயன்படுத்தும் போது இந்த விஷயங்களை மனசில வச்சுக்கோங்க..!!

By Dinesh TG  |  First Published Oct 22, 2022, 10:08 AM IST

நம் இந்தியாவில் இடம்பெற்றுள்ள அனைத்து மதம் சார்ந்த வழிபாடுகளிலும் ஊதிபத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோன்று இறுதிச் சடங்குகளின் போதும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. 
 


மனிதனுக்கு புறவழியாகவும் ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான், பல்வேறு செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அப்படியொரு நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டு வருவது தான் ஊதுபத்தி. இதன் வழியாக வெளிப்படும் வாசனை நாசி வழியாக சென்று மூச்சுப் பிரச்னை தொடர்பான பிரச்னைகளை அகற்றவும், சுற்றுச்சூழலிலுள்ள மாசுபாட்டை களையவும் உதவுகின்றன. இந்நிலையில் வீடுகளில் ஊதுபத்திகளை கொளுத்தி வைப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்டீரியா பண்புகளை எதிர்க்கும்

Latest Videos

undefined

இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்துதான் ஊதுபத்தியும், அதற்கான குச்சியும் தயாரிக்கப்படுகின்றன. அதனால் இயற்கையாகவே அதற்கு நுண்ணுயிர் கிருமிகளை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதை நீங்கள் ஒரு அறையில் பற்றவைப்பதனால், அந்த பகுதி முழுவதும் நோய் எதிர்ப்பு பண்புகளை பெறுகிறது. மேலும் இதை நுகரும் போது, ஊதிபத்தியின் வாசனையிலுள்ள போஸ்வெல்லிக் அமிலம் போன்ற அழற்சி பண்புகளை எதிர்க்கும் கூறுகள் மூச்சு வழியாக உடலுக்குள் செல்கின்றன. அதனால் நமது உடலில் ரத்தம் ஓட்டம் ஆரோக்கியம் பெறுகிறது.

நோய்த்தொற்று பிரச்னையில் இருந்து காக்கின்றன

கோயில்கள் உள்ளிட்ட புனித இடங்களை தவிர்த்து தியான மடங்கள், ஆயுர்வேட மையங்கள் உள்ளிட்டவற்றிலும் ஊதுவத்திகள் ஏற்றப்படுகின்றன. இதன்மூலம் வெளியாகும் வாசனை நமது உடலில் இருக்கும் ஏற்பிகளை செயல்படுத்தும் பண்புகளிஅ கொண்டுள்ளது. தோலில் இருக்கும் கெரட்டின் உற்பத்தியை இந்த வாசனை நறுமணங்கள் அதிகரிகின்றா. இதனால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறதும். மேலும் உடல் சார்ந்து இயங்கக்கூடிய பல்வேறு பண்புநலன்களை ஊதுவத்தி வாசனை குணப்படுத்துகிறது.

ஒற்றைத் தலைவி பிரச்னை இருக்காது

இன்று பலரும் கணினி முன்பு அல்லது கைப்பேசி முன்பு பல மணிநேரம் செலவழிக்கிறோம். இதனால் பலருக்கும் ஒற்றைத் தலைவலி பிரச்னை உண்டாகி அவதிகளை தருகிறது. அப்போது ஊதுபத்தியில் இருந்து வரும் வாசனை, மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் விரைவாகவே ஒற்றைத் தலைவலி பிரச்னைகள் நீங்குகின்றன. அகர்பத்திகளில் யூகலிப்ட்ஸ், மிளகுக்கீரை போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. அதுபோன்றவற்றை வீட்டுக்குள் பற்றவைக்கும் போது தலைவலி சார்ந்த பிரச்னைகள் நீங்குகின்றன. மேலும் இருதயமும் அமைதி பெறுகிறது.

ரீஃபைண்டு எண்ணெய் உடலுக்கு நன்மையா? தீமையா?

நரம்பு மண்டலத்துக்கு நன்மை சேர்க்கிறது

நமது மனநிலையும், இருதய நலனையும் பெருக்குவதில் ஊதுவத்தி வாசனைக்கு தனியிடம் உண்டு. இதனால் நரம்பு மண்டலத்திற்குள் ஏற்படும் கோளாறுகளும் நீங்குகிறது. பொதுவாக மனநிலை பதட்டமான சூழலை அடையும் போது, அது நரம்புகளை பாதிக்கச் செய்து, கவலையை அதிகரிக்கும். ஆனால் ஊதுவசத்தி வாசனைகளை நுகர்வதால், நரம்பு இணைப்பு தூண்டப்பட்டு, அதனுடைய செயல்பாடு திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதனால் தான் பணியிடங்களிலுள்ள தூபக் குச்சிகளை பலரும் எரித்து வைக்கின்றனர்.

பட்டாசு வாங்கும் போது இதெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!!!

சுற்றுப்புறத்தை தூய்மையாக்குகிறது

ஊதுபத்தியில் நறுமணம் வீட்டை மட்டுமில்லாமல், சுற்றுப்புறப் பகுதிகளையும் தூய்மையாக்குகிறது. சுற்றுப்புற காற்றில் இருக்கும் கிருமிகள், நாற்றங்களை நீக்கி அங்கு தூய்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கு கற்பூர வாசனையை கொண்ட ஊதுபத்திகளை பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் நேர்மறையான ஆற்றலை வழங்குகிறது. அதேபோன்று புதியதாக செல்லும் ஒரு இடத்தில் ஊதுவத்தியின் வாசனை நாசிக்குள் ஏறும்போது, நமக்கு நம்பகத்தன்மை ஏற்படுகிறது. அதுதொடர்பான காரியங்கள் மீது நேர்மறையான எண்ணங்கள் ஏற்படுகின்றன.

click me!