Keelanelli benefits: கீழாநெல்லி, ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். செடி முழுதும் அதாவது இலைகள், தண்டுத் தொகுதி மற்றும் வேர்கள் உட்பட அனைத்துமே மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
கீழாநெல்லி, ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் அதாவது இலைகள், தண்டுத் தொகுதி மற்றும் வேர்கள் உட்பட அனைத்துமே மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
நம்முடைய பாரம்பரிய தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், இன்றைய பிஸியான வாழ்கை முறையில், பொதுவாக குப்பைகளில் கிடைக்கும், இந்த கீழாநெல்லி செடி எவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டது என்பது பலரும் அறியாத ஒன்றாக உள்ளது.
சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. இந்த கீழாநெல்லி இலைகளில், பில்லாந்தின் என்னும் மூலப்பொருள் உள்ளதால், இதில் கசப்புத்தன்மை அதிகம் இருக்கும். விந்துவை அதிகமாக வளர்க்கும். கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும்.
undefined
கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்:
கீழாநெல்லி, சிறுநீரை பெருக்கும் தன்மை கீழாநெல்லிக்கு உண்டு. கண் தொடர்பான நோய், மற்றும் தீராத தலைவலி, கல்லீரல் தொடர்பான பிரச்சினை, சொறி சிரங்கு, உடல் சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றிற்கு சிறந்த மருத்துவத்தை தருகிறது.
பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும்.
மேலும் ரத்த சோகை, கல்லீரல் பாதிப்புகள், மலட்டுத்தன்மை, சர்க்கரை நோய் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும்.
கீழாநெல்லியை பயன்படுத்தும் முறை:
1. கீழாநெல்லி இல்லையை பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் எலுமிச்சை சாறு மோர் ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் மஞ்சள்காமாலை நீங்கும்.
2. கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.
3. கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
4. தினமும் உலர்ந்த கீழாநெல்லி பொடியை உணவிற்கு முன்பு சேர்த்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம், மற்றும் கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை நீக்கும்.
5. கீழாநெல்லி வேர், பசும்பால், நல்லெண்ணெய் சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து வடிகட்ட சாறை எடுத்து குடித்து வந்தால், வயிற்றுப்புண், தலைவலி நீங்கும்.
6. கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து குளித்து வந்தால், சொறி சிரங்கு நோய்கள் சரியாகும்.
7. கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும்.