இளம் வயதிலேயே கெமிக்கல் டை பயன்படுத்துபவரா நீங்கள்? இனி கவலை வேண்டாம்? கொய்யா இலை போதும்!

By manimegalai aFirst Published Jan 5, 2022, 12:02 PM IST
Highlights

கொய்யா இலையைப் பயன்படுத்தி முடியை கருமையாக்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

இளநரை என்பது சிறுவர் துவங்கி பெரியவர் வரை நம் அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கு, இளநரை பரம்பரை காரணமாகப் வருகிறது. ஒரு சிலருக்கு வைட்டமின் பி12 குறைபாடு, டென்சன், காப்பர் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தச்சோகை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளால் வருவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் எனும் நிறமி குறைவாக இருப்பது தான் இளநரைக்குக் காரணமாக உள்ளது. தொடக்கத்திலேயே இதைக் கவனித்து உரிய பராமரிப்பு மேற்கொண்டால் இளநரையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். இளநரைக்கான தீர்வு இதுமட்டும்தான் என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால்,  இளநரைக்கு தீர்வாக பலர் கெமிக்கல் டை அடிப்பது உள்ளிட்ட தவறான வழிமுறைகள் கையாளுகின்றன.

சமீபத்தில் கலர் டை, கருப்பு நிற டை அடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இதனால் பலருக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. இருந்தபோதும் தன்னுடைய இளமைக் காலத்தை வீணாக்க விருப்பம் இல்லை என பலர் இச்செயல்களை தொடர்ந்து மேற்கொள்கின்றனர். ஆனால் நிச்சயம் அவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் தான் ஏற்படுத்தும். எனவே, பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் கருப்பு நிற முடியைப் பெற நீங்கள் முயற்சிக்கலாம். அதற்கு ஒரு சிறந்த வழியாக கொய்யா இலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக இளம் வயதில் நரை முடி வருவதற்கு நம்மிடம் வைட்டமின் பி குறைபாடு மற்றும் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவது போன்ற பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் கொய்யா இலையில் வைட்டமின் பி மற்றும் சி அதிகளவில் உள்ளது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜின் செயல்பாட்டையும் இது தூண்டுவதால் கொய்யா இலையை நாம் பயன்படுத்தும் போது இளநரை வராமல் தடுக்க முடியும். இதோடு கொய்யாவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மைகள் உள்ளதால் உங்கள் கூந்தலைப் பராமரிக்கவும், அதன் நிறத்தை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. எனவே கெமிக்கல் டை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் இனிமேல் கொய்யா இலையையே நம்முடைய முடி பராமரிப்பிற்கு நாம் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
 
கொய்யா இலையைப் பயன்படுத்தி முடியை கருமையாக்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலை, 1லிட்டர் தண்ணீர் போன்றவற்றை முதலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் எடுத்து வைத்துள்ள கொய்யா இலைகளை நன்றாக அலசி எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சுமார் 20 நிமிடங்கள் கொதித்து முடிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.

கொய்யா இலை தண்ணீர் நன்றாக ஆறியதும், அதனை எடுத்து தலைமுடி வேர் முழுவதும் முழுமையாகப் படும்படி தடவியதோடு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசி விடுங்கள். இதன் மூலம் தலையின் வேர்கள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு முடி வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

இதுபோன்று தொடர்ந்து நீங்கள் மேற்கொள்ளும் போது உங்களுக்கு கருமையான கூந்தல் கிடைக்கப்பெறும். இயற்கையான முறையில் செய்வதால் தைரியமாக நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். எந்தவித பக்கவிளைவுகள் இருக்க வாய்ப்பில்லை.
 

click me!