
பொதுவாக வாழைத்தண்டை கிட்னி கல் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவு என்று நாம் நினைப்போம். இதனால் அதை மார்க்கெட்டில் பார்த்தால் கூட வாங்க மாட்டோம். ஆனால் உண்மையில் இது கிட்னி கல் பிரச்சினைக்கு மட்டுமல்ல, ஏராளமான உடல்நல பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. ஆமாங்க வாழைத்தண்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொட்டி கிடைக்கின்றன. மேலும் இதன் விளையும் ரொம்பவே மலிவானது. சரி இப்போது இந்த பதிவில் எந்தெந்த பிரச்சனைக்கு வாழைத்தண்டு நன்மை பயகும்? எப்படி அதை சாப்பிட கூடாது? என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் :
மற்ற காய்கறிகளை காட்டிலும் வாழைத்தண்டில் தான் நார்ச்சத்து ரொம்பவே அதிகமாக இருக்கிறது. ஆகவே வயதானவர்கள் கூட வாழைத்தண்டை உணவில் தயக்கமின்றி சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது சூப்பர் ஃபுட் என்று கூட சொல்லலாம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
வாழைப்பழத்தைப் போல வாழைத்தண்டும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது உடலில் நீர்மத்தை சமநிலைப்படுத்த பெரிதும் உதவிகிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சிறுநீரக கற்களை கரைக்கும் ;
வாழைத்தண்டில் டையூரிக் பண்புகள் அதிகமாக உள்ளதால் இது சிறுநீரகத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கவும், ஏற்கனவே இருக்கும் கற்களை வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. எனவே, சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு 2-3 முறையாவது வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டை எப்படி சாப்பிடணும்?
சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் வாழைத்தண்டை ஜூஸாக குடிக்கலாம். இது தவிர உணவில் பொரியலாக, பருப்பு சேர்த்து கூட்டாக, சூப் ஆக மற்றும் சட்னியாக கூட சாப்பிடலாம்.
வாழைத்தண்டு இப்படி சாப்பிட்டால் டேஞ்சர்!
சிலர் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பார்கள். ஆனால் அது நல்லதல்ல. வாழைத்தண்டை வெறும் வயிற்றில் உணவாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ ஒருபோதும் குடிக்கவே கூடாது. இது தவிர, ஆரம்பகால சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வாழைத்தண்டு உணவில் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.