
ஒவ்வொரு இந்திய வீட்டின் கிச்சனிலும் கண்டிப்பாக அஞ்சறை பெட்டி (Spice Box) இருக்கும். கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், மஞ்சள் போன்ற பலவிதமான மசாலா பொருட்களை அதில் சேமித்து வைத்திருப்போம். பொதுவாக அஞ்சறைப்பெட்டியில் 5 அறைகள் மட்டும்தான் இருக்கும் ஆனால் தற்போது 7 அல்லது 9 பெட்டிகளுடன் விற்பனையாகின்றன. அஞ்சறைப்பெட்டியில் எல்லா பொருட்களையும் வைக்க கூடாது. அதில் வைக்க வேண்டிய பொருட்கள் என்று சில உள்ளன. இந்த பதிவில் அஞ்சறைப் பெட்டியில் எந்த மாதிரி பொருட்களை வைக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
அஞ்சறைப்பெட்டியில் வைக்கக்கூடாத பொருட்கள் :
1. உப்பு :
அஞ்சறை பெட்டியில் உப்பு ஒருபோதும் வைக்கவே கூடாது. ஏனெனில் உப்பு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையை கொண்டுள்ளன. அப்படிஅஞ்சறை பெட்டியில் மற்ற பொருட்களுடன் உப்பை வைக்கும் போது அதன் சுவை உள்ளிட்டவை குறைந்து விடும். ஆகவே தனியாக ஒரு டப்பாவில் உப்பை போட்டு வைப்பது தான் நல்லது.
2. பணம் :
சில வீடுகளில் அஞ்சறை பெட்டியில் மசாலா பொருட்கள் மட்டுமல்ல, எடுப்பதற்கு சுலபமாக இருக்கும் என்று எண்ணி பணத்தையும் வைத்திருப்பார்கள். ஆனால் அஞ்சறைப்பெட்டியில் பணத்தை வைப்பது மிகவும் தவறான விஷயம் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே, அஞ்சறை பெட்டியில் பணத்தை வைக்கும் பழக்கத்தை உடனே நிறுத்துங்கள்.
3. எண்ணெய் :
அஞ்சறைப்பெட்டியில் கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களை வைக்க கூடாது அவ்வாறு வைத்தால் அது மசாலா பொருட்களுடன் கலக்க வாய்ப்பு உள்ளன. எனவே எண்ணெய்களை தனியாக பாட்டிலில் சேமித்து வையுங்கள்.
4. இதர பொருட்கள் :
சீனி, அரிசி, பருப்பு, மாவு போன்றவற்றை அஞ்சறைப் பெட்டியில் ஒருபோதும் வைக்கவே கூடாது. அவற்றை எப்போதுமே தனித்தனியாக தான் சேமித்து வைக்க வேண்டும்.
5. கெட்டுப் போகக் கூடிய பொருட்கள் :
அஞ்சறைப் பெட்டியில் விரைவாக கெட்டுப் போகக்கூடிய பொருட்களில் ஒருபோதும் வைக்கவே கூடாது. அதுபோல ஈரமான பொருட்களையும் வைப்பதை தவிர்க்க வேண்டும் அப்படி வைத்தால் பூஞ்சைகள் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதையும் வைக்காதீங்க!
- அஞ்சறைப்பெட்டியில் மாத்திரைகளை வைப்பது தவிர்ப்பது நல்லது. அப்படி வைத்தால் வீட்டில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
- அதுமட்டுமில்லாமல் சனிபகவானுக்கு உரிய எள்ளை அஞ்சறைப்பெட்டியில் வைக்கவே கூடாது. இதனால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் குடும்பத்தின் நிதி நிலைமையும் பாதிக்கும்.
அதுவே இனி அஞ்சறைப் பெட்டியில் இது போன்ற பொருட்களை வைக்காதீர்கள். அதுமட்டுமல்லாமல் அஞ்சறைப் பெட்டியை எப்போதுமே சுத்தமாக வையுங்கள். அப்போதுதான் அதில் இருக்கும் பொருட்களும் விரைவில் கெட்டுப் போகாது. நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.