
பொதுவாக இஞ்சியை டீ, குருமா, பிரியாணி போன்றவற்றில் வாசனை மற்றும் சுவைக்காக நாம் பயன்படுத்துவோம். ஆனால் அதையும் தாண்டி இஞ்சியில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளன தெரியுமா? ஆமாங்க, காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக 30 மி இஞ்சி சாறு குடித்து வந்தால் நம்முடைய உடலில் ஏராளமான மாற்றங்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பதிவில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை யாரெல்லாம் குடிக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இஞ்சி சாறு குடிப்பதன் ஆரோக்கிய நன்மைகள் :
1. டைப் 2 சர்க்கரை நோயாளிகள்
பொதுவாக இன்சுலின் ரெசிஸ்டண்ட்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் இன்சுலின் உணர்ந்துடன் ரொம்பவே குறைவாக இருக்கும். இதன் விளைவாக டைப் 2 நீரிழிவு பிரச்சனை ஏற்படும். இதை கட்டுப்படுத்துவது சிரமம். ஆகவே டைப் 2 நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையில் இஞ்சி சாறு குடித்து வந்தால் இன்சுலின் உணர்கிறேன் அதிகரிக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
2. கர்ப்பகால வாந்தி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சில மாதங்கள் வரைக்கும் வாந்தி வரும். அதிலும் குறிப்பாக காலை எழுந்ததுமே வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் அதிகமாகவே ஏற்படும் அதை குறைக்க இஞ்சி சாறு பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு இஞ்சி சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும்.
3. இரத்த சர்க்கரை அளவு
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் காலை உணவுக்கு பிறகு அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரவும் இஞ்சி சாறு குடிக்கலாம்.
4. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த
இஞ்சில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் மூலக்கூறுகள் உள்ளன. அவை உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் சுமார் 30 மில்லி இஞ்சி சாறு குடித்து வந்தால் இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரையும்.
5. செரிமான செயல்பாடு அதிகரிக்கும்
இஞ்சியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் சில மூலக்கூறுகளும் உள்ளன. அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குடலில் ஜீரணத்துக்கு தேவையான என்சைம்களை உற்பத்தி செய்யவும், செரிமான செயல்பாட்டை அதிகரிக்கவும் இஞ்சி சாறு குடியுங்கள்.
6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இஞ்சியில் நிறைய ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆன்ட்டி வைரல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் வைட்டமின் சி உள்ளன. எனவே தினமும் இஞ்சி சாறு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும் இதனால் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவோம்.
யாரெல்லாம் வெறும் வயிற்றில் இஞ்சி சாறு குடிக்க கூடாது?
- குடலில் அமில வாயு ரிஃப்ளக்ஸ்
- சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள்
- கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குடிக்க வேண்டாம்.
- இரத்தப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள்
- அறுவை சிகிச்சை செய்ய தயாராகிறவர்கள்
- பித்தப்பை கற்கள் பிரச்சனை இருப்பவர்கள்
ஆகியோர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஒருபோதும் இஞ்சி சாறு குடிக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.