Diabetes: சர்க்கரை நோய்க்கு தீர்வாகும் கொத்தமல்லி சாறு...தினமும் 1 டம்ளர் போதும் ...எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

Anija Kannan   | Asianet News
Published : Mar 24, 2022, 08:32 AM IST
Diabetes: சர்க்கரை நோய்க்கு தீர்வாகும் கொத்தமல்லி சாறு...தினமும் 1 டம்ளர் போதும் ...எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

சுருக்கம்

Diabetes: நம்முடைய பாரம்பரிய உணவு பொருட்களில், ஒன்றான கொத்தமல்லி உணவின் ருசிக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

இந்திய சமையல் அறையில் கட்டாயம் கொத்தமல்லி இடம்பெற்றிருக்கும், அதிலும், குறிப்பாக நம்முடைய தமிழக பாரம்பரிய கலாசாரத்தில், கூட்டு, சாம்பார், ரசம், பொரியல், சட்னி போன்ற  பல வித உணவுகளில் இதை வாசனைக்காகவும், ருசிக்காகவும் கட்டாயம் பயன்படுத்துகிறோம்.

தினசரி உணவில், கொத்தமல்லி  இலை உள்ளிட்ட பச்சை இலைகளை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் சிறந்தது. கொத்தமல்லி சாறில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. இவைகள்உடலுக்கு, நோய்களையும் எதிர்த்து போராடும் ஆற்றலை அளிக்கின்றது. கொத்தமல்லி சாற்றை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன
பல்வேறு நன்மைகளை கொண்ட கொத்தமல்லியை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும்  பயன்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது:

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி, சாறு குடிப்பதால் ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவு கட்டுப்படும். எனவே, கொத்தமல்லி இலைகள் அல்லது விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தினமும் அதன் தண்ணீரை எடுத்து குடித்து வரவும்.

செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை:

வெயில் காலங்களில் ஏற்படும், செரிமானம் மற்றும் குடல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நீங்கள், கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகள்  மற்றும் குடல் நோய் போன்றவை சரி செய்யலாம். இதன் காரணமாக உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருப்பதோடு, பசியும் நன்றாக எடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

கொத்தமல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது சீரம் குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ள உணவு பொருளாக பார்க்கப்படுகிறது. 

கல்லீரல் பிரச்சனைகளுக்கு மருந்தாகும்:

கொத்தமல்லி இலைகளில் போதுமான அளவு ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை, கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. பிட்டா கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த இந்த கொத்தமல்லி உதவுகின்றன.

எடையை குறைக்க:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பெரும்பாலும், உடல் எடை, தொப்பை பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். எனவே, கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதிக நன்மைகளைப் பெறலாம். இதற்கு, மூன்று தேக்கரண்டி கொத்தமல்லியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்து பாதியாக குறைந்த பின்னர், வடிகட்டி, குடித்தால் உடல் எடை குறையும்.

மேலும் படிக்க...Sexual health: தினமும் உடற்பயிற்சி அவசியம்...பாலியல் உறவுக்கு பெஸ்ட்...! யார் சொல்றாங்க தெரியுமா..?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்