30 நிமிடத்தில் உங்களுக்கு பசி எடுக்கிறதா..? உஷார் இதுதான் காரணம்..!

First Published Jun 15, 2018, 3:39 PM IST
Highlights
have you feel hungery within 30 minutes


30 நிமிடத்தில் உங்களுக்கு பசி எடுக்கிறதா..? உஷார் இதுதான் காரணம்..!

என்னதான் சாபிட்டாலும் சரியாக அரை மணி நேரத்தில் பசி எடுக்கிறது என்று சில பேர் சொல்வார்கள் அல்லவா..? அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

சோடியம் அதிகரிப்பு

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக அளவில் சோடியம் இருப்பதால், பசி உணர்வு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

பசி உணர்வு அதிகரிப்பதால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்..இவ்வாறு அடிக்கடி உண்டு வந்தால் உடல் எடை அதிகரித்து தேவை இல்லாத நோயெல்லாம் வர நேரிடும்.. நடப்பதற்கு கூட சற்று சிரமாக இருக்கும்.

பொதுவாகவே உடலில் அதிக நீர்ச்சத்து இருந்தால் பசி குறைவாக இருக்கும்

அதிக உப்பு நிறைந்த உணவு, ப்ரோடீனை சிதறடித்து விடுகிறது. இந்த ப்ரோடீன் அப்படியே யூரியாவாக மற்றப்படுகிறது.

அதிக உப்பு எடுத்துக்கொண்டாலும் ரத்த அழுத்தம் கூட அதிகரிக்கும்.

உப்பு நிறைந்த வேர்க்கடலை எடுத்துக்கொண்டால் அதிக நீரை உட்கொள்ள  வேண்டும். அதிகமாக தண்ணீர் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் நல்ல  முறையில் சீராக இயங்கும். 

பதப்படுத்தப்பட்ட உணவு

பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட உணவில் அதிக அளவில் உப்பு உள்ளது.

அதுமட்டுமில்லாமல் சர்க்கரை, நிறைவான கொழுப்பு, கார்போஹைரெட் உள்ளது.

பாக்கெட் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறுத்தினாலே போதும் சோடியம் குறைந்துவிடும்...

இதனால் அதிவேக உடல் வளர்ச்சியை தடுக்கும்...எடையை குறையும்...எனவே, அதிக சோடியம் நம் உடலில் இருப்பது அதிக பசிக்கு வழி வகுக்கும்..அதிக பசியினால் கண்டதை உண்டு உடல் பருமன் அதிகரிக்கும் என்பதை புரிந்துக் கொண்டு தேவையான உணவுகளை மட்டும் உண்டு வருவது நல்லது.

click me!