Happy hormones: நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க காரணமான 4 ஹார்மோன்கள், பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!
ஹார்மோன்கள் சரியான் அளவு சுரக்கவில்லை என்றால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இன்றைய 'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். இது போன்ற பிரச்சனைகள் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. சிலருக்கு நீண்ட நாட்களாக ஹார்மோன் சமநிலையில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை பற்றிய புரிதல் இல்லாமலே இருக்கக் கூடும்.
ஹார்மோன்கள் என்ற வார்த்தை மூளையில் உள்ள ரசாயனங்கள் அதிகமாக சுரக்கும் இளம் வயதினரைப் பற்றியது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், ஹார்மோன்கள் என்பவை பெண்களின் மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
ஹார்மோன்கள் வழிநடத்தும் :
undefined
நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள் மற்றும் உங்கள் இதயம் எப்படி துடிக்கிறது அல்லது படபடக்கிறது உள்ளிட்ட பல செயல்முறைகளை ஹார்மோன்கள் வழிநடத்துகின்றன. ரசாயன தூதுவர்கள் எனப்படும் ஹார்மோன்கள் உடல் செயல்படும் விதம் முதல் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பது வரை அனைத்தையும் கட்டுப்படுத்த பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களில் செயல்படுகின்றன. குறிப்பாக, உடல் எடை, பாலியல் ஆர்வம் உள்ளிட்டவை ஹார்மோன்கள் வழிநடத்துதலில் முக்கியமானவை ஆகும்.
உடலும், மனமும் மகிழ்ச்சியின் உணர்வை அனுபவிக்கும் போது, உங்கள் ரத்தத்தில் ஃபீல்-குட் ஹார்மோன்ஸ்" ஹார்மோன்கள் வெளியிடப்படும். இந்த ஹார்மோன்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.
டோபமைன்:
டோபமைன் ஹார்மோன், இது மகிழ்ச்சியான தருணத்தில் வெளிப்படும். இதன் தனித்துவம் என்னவெனில் இதுதான் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதாகும். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை கண்காணிக்கிறது. உதாரணமாக, நாம் தியானம் செய்யும் போது மூளை அதிக டோபமைனை வெளியிடுகிறது என்பதற்கும் சில சான்றுகள் உள்ளன. தியானத்தின் போது ஏற்படும் நனவின் மாற்றம் டோபமைனின் வெளியீட்டைத் தூண்டலாம்.
செரோடோனின்:
இந்த ஹார்மோன் எப்போதும் சமநிலையில் இருத்தல் அவசியம். இதுதான் நமது மனநிலை மற்றும் நடத்தையை தீர்மானிக்கிறது. இந்த ஹார்மோன்தான் நமது அறிவாற்றல், ஞாபகசக்தி மற்றும் கற்றலுக்கு அடிப்படையாக அமைகிறது. மனநலனில் முக்கியப்பங்கு வகிக்கும். நமது மூளை மகிழ்ச்சி மற்றும் சோக ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
என்டோர்பின்ஸ்:
எண்டோர்பின்ஸ் நம் உடலின் இயற்கையான வலி நிவாரணியாகும், ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது சுரக்கும் இந்த ஹார்மோன் தான் பாலியல் செயல்பாடு அல்லது மராத்தான் ஓட்டம் அல்லது சாப்பிடுவது போன்றவற்றுக்கு உதவுகிறது. நம் உடல் மன அழுத்தம் அல்லது அசௌகரியத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஹார்மோன் சுரக்கிறது. உணவு உண்பது, வேலை செய்வது அல்லது உடலுறவு கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது என்டோர்பின்ஸ் அளவுகள் அதிகரிக்கும்.
ஆக்ஸிடோசின்:
நீங்கள் காதலை வெளிப்படுத்தும் போது, ஒருவரை கட்டிப்பிடிக்கும் போதும் ஏற்படும் பரவசம், பதற்றம், தவிப்பு, கிளர்ச்சி போன்ற அத்தனை உணர்ச்சிகளுக்கும் இந்த ஹார்மோனும் காரணமாக இருக்கிறது. பிறந்த குழந்தையைப் பராமரிக்க, பாதுகாக்க, குழந்தையைச் சுற்றி அமைதியைப் பரப்ப, உற்சாகப்படுத்த என ஒரு தாய் பெறும் முக்கிய ஹார்மோன் ஆக்ஸிடோசின். எனவே இது "லவ் ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது.