World sleep day 2022: சமீபத்திய ஆய்வின் முடிவில், 93% இந்தியர்கள் தூக்கம் தொலைத்துள்ளதாகவும், அவர்களில் 65% பேருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வின் முடிவில், 93% இந்தியர்கள் தூக்கம் தொலைத்துள்ளதாகவும், அவர்களில் 65% பேருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் விதமான இன்று, ஆண்டுதோறும் உலக தூக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், தூக்கத்தின் முக்கிய துவம் பற்றியும் ஒருவர் இரவில் தூக்கத்தை, தொலைத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.
உலக தூக்க தினம்:
ஒரு நல்ல இரவு தூக்கம் மன அழுத்தத்தை குறைத்து உடலுக்குத் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒருவர் நிம்மதியான தூக்கம் பெறவில்லை என்றால், பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
தூக்கம் தொலைத்த இந்தியர்கள்:
சமீபத்திய ஆய்வின் முடிவில், 93% இந்தியர்கள் தூக்கம் தொலைத்துள்ளதாகவும், அவர்களில் 65% பேருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தூக்கம் சரியாக இல்லாத நபர்களுக்கு மரபணுவில் பாதிப்பு ஏற்படலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கம் குறைவதற்கு முக்கிய காரணமாக, இன்றைய நவீன பழக்கவழக்கங்கள் காணப்படுகிறது. ஒருவர், அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய மன அழுத்தம், பொருளாதார சிக்கல், காபி மற்றும் தேநீரை அதிக அளவில் பருகுவது போன்றவை நாம் தூக்கம் தொலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்:
பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம், தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன.
இளம் வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் ஏற்படும்.
மேலும், இது நினைவாற்றல் குறைபாடுகள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, நீரிழிவு நோய்க்கான ஆபத்து, இதய நோய் ஆபத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில சமயங்களில் குறைந்த செக்ஸ் டிரைவ் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் மேலும் கூறினார்கள்.
நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான சில டிப்ஸ்:
1. காலையில் எழுந்துகொள்ளும் நேரமும் இரவில் படுக்கப்போகும் நேரத்தையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
2. பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும். தூக்கப் பிரச்சனை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் அசதி காரணமாக இரவில் நல்ல தூக்கம் வரும்.
3. படுக்கைக்கு செல்வதற்கு முன் குளிப்பது ஒருவரின் தூக்கத்தை மேன்படுத்தும்.
4. செல்போன், டிவி ஆகியவற்றின் பயன்பாட்டை குறைப்பது, தூக்கத்தின் அளவை அதிகரிக்கும்.
5. தியானம் மற்றும் இனிமையான பாட்டு கேட்பதன் மூலம் எளிதில் தூக்கம் வரும்.
6. சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கிற பழக்கம் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.,,,