Summer Tips: கோடை காலத்தில் முடி அதிகமாக முடி கொட்டுதா..? கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய குறிப்புகள்..

By Anu KanFirst Published Jun 19, 2022, 12:22 PM IST
Highlights

Summer Tips: கோடை காலத்தில் நீங்கள் உங்கள் சருமத்தையும், கூந்தலையும் சூரியனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு முக்கியமாக கீழே சொன்ன வீட்டு வைத்திய குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஜூலை மாதங்கள் நெருங்க நெருங்க, கொளுத்தும் சூரியன் நம்மை வாட்டி வதைக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் சருமத்தையும், கூந்தலையும் சூரியனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு முக்கியமாக கீழே சொன்ன வீட்டு வைத்திய குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

 ஷாம்புகளில் மாற்றம் தேவை:

பெரும்பாலான ஷாம்புகளில் ஏராளமான இரசாயனங்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடியை சரிசெய்வதற்குப் பதிலாக நீண்ட காலத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் நிச்சயமாக இயற்கை பொருட்கள் மற்றும் மூலிகை, கரிமப் பொருட்கள் அடங்கி ஷாம்புவிற்கு மாறுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

தண்ணீரில் மாற்றம்:

கடின நீரைப் பயன்படுத்துவது கூந்தல் மந்தமாகவும், வறட்சியாகவும் காணப்படுவதோடு, முடி உதிர்வதற்கும் வழிவகுக்கும். ஆனால் அதிக உப்பு தன்மை இல்லாத நீரானது முடிக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் ஆச்சரியமான பலன்களை கொடுக்க கூடியது.  

உணவு பழக்க வழக்கம்:

கோடை காலத்தில் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவு வகைகள் உட்கொள்வது அவசியம். அனைத்து தருணங்களிலும் கூந்தலை மென்மையாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் இன்றியாமையாதது.  எனவே, உணவுமுறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்கள்:

எண்ணெய்கள் கூந்தலுக்கு ஒரு இயற்கையான பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது. இது முடி ஒன்றுடன் ஒன்று உராய்ந்து சேதமடைவதை தடுக்க உதவுகிறது. மேலும் எண்ணெய் முடியை சிக்கில் இருந்து பாதுகாப்பதோடு, உச்சந்தலைக்கும் குளிர்ச்சியை தருகிறது. எனவே, வெயில் காலத்தில் தலையில் எண்ணெய் வைப்பது நல்லது. 

 மேலும் படிக்க ....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்...20 ஜூன் முதல் 26 ஜூன் 2022 வரை...இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும்

 

click me!