Thumbai poo: சளி, காய்ச்சலுக்கு தீர்வளிக்கும் தும்பை பூ....இதை சாப்பிட்டால் நன்மைகள் ஆயிரம்...

Anija Kannan   | Asianet News
Published : Jun 18, 2022, 02:34 PM IST
Thumbai poo: சளி, காய்ச்சலுக்கு தீர்வளிக்கும் தும்பை பூ....இதை சாப்பிட்டால் நன்மைகள் ஆயிரம்...

சுருக்கம்

Thumbai poo: தலைவலி, சளி, மூக்கில் சதை வளர்ச்சி என அனைத்துப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக தும்பை இருக்கும்.

தலைவலி, சளி, மூக்கில் சதை வளர்ச்சி என அனைத்துப் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக தும்பை இருக்கும். பாட்டி வைத்தியத்தில் தும்பை இலையை சாப்பாட்டில் சேர்ப்பது. ஆவி பிடிப்பது, தும்பை பூ போட்ட நல்லெண்ணெய்யை தேய்ப்பது எல்லாம் முக்கிய பழக்கவழங்கங்கள். மழைக்காலம் வந்தாலே இந்த தும்பை வைத்தியங்கள் தான் பிரதானமான இன்னும் பல வீடுகளில் இருக்கிறது. , தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள் அளப்பரியது. இதுபற்றி பார்ப்போம்.

இந்த பூவை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா..? தும்பை பூவும் நன்மைகள்:

1. சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

2.  தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் அசைவ உணவுகள்  உப்பு, புளி, சேர்க்கக் கூடாது.

3.  காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். 

4. ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும்.தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.

 மேலும் படிக்க....Relationship: படுக்கையில் வேற லெவல் இன்பம் பெற...ஆண்களே! இரவில் பாலில் இந்த ஒரு பொருள் போதும்...


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்