மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த சவரன் விலை..! பொதுமக்கள் அதிருப்தி..!

By ezhil mozhiFirst Published Mar 3, 2020, 7:22 PM IST
Highlights

கிராமுக்கு ரூ.9 உயர்ந்து 4014 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த சவரன் விலை..! பொதுமக்கள் அதிருப்தி..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்வு கண்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர் 

அதாவது, ஒரு சவரன் தங்கம் 34 ஆயிரம் ரூபாய் நெருங்கும் தருணத்தில் இருந்தது. அதன் பின்னர் மெல்ல குறைந்து தற்போது 32 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

அதன் படி இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.9 உயர்ந்து 4014 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 112 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 4025.00 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம் 

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து 48.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலக அளவில்  காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதால் உலக அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மற்ற துறைகளில் முதலீடு செய்வதை விட தங்கத்தின் மீதான முதலீட்டுக்கே முதலீட்டாளர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

click me!