கிருஷ்ணகிரி வேலூருக்கு மழை..! 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை லேசான மழைக்கு கேரன்டி!

thenmozhi g   | Asianet News
Published : Mar 03, 2020, 04:56 PM ISTUpdated : Mar 03, 2020, 05:08 PM IST
கிருஷ்ணகிரி வேலூருக்கு மழை..! 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை லேசான மழைக்கு கேரன்டி!

சுருக்கம்

வடக்கில் இருந்து வீசக்கூடிய காற்றும், அதிக அழுத்த கடல் காற்றும் ஒன்று சர்வதால் இந்த  மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதன் படி கன்னியாகுமரி முதல் ஹைதராபாத் வரையிலான உள்மாவட்டங்களில் காற்றின் திசை இருக்கும்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் மார்ச் 6 ஆம் தேதி முதல் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் தெரிவித்து உள்ளார். 

அதன் படி, 

வரும் வெள்ளிக்கிழமையன்று வெப்பநிலையில் மாற்றம் ஏற்படலாம் என்றும், அவ்வாறு மாறும் தருணத்தில் பகல் நேரத்தில் அதிக வெப்பமும், இரவு நேரத்தில் சற்று குளிரையும் உணரலாம் என  தெரிவித்து உள்ளார். 

வடக்கில் இருந்து வீசும் வறண்ட காற்றும், அதிக அழுத்த கடல் காற்றும் ஒன்று சேர்வதால் இந்த  மழைக்கான வாய்ப்பு உள்ளது. அதன் படி கன்னியாகுமரி முதல் ஹைதராபாத் வரையிலான உள்மாவட்டங்களில் காற்றின் திசை இருக்கும். இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், கர்நாடகத்தின் கிழக்கு பகுதியிலும், ஆந்திரந்திவின் மேற்கு பகுதிகளிலும் மேக மூட்டத்துடன்  காணப்படும் என தெரிவித்து உள்ளார்

 

இந்த மழையால் பயனடையக்கூடிய பகுதிகள் 

தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவிற்கு இடியுடன் கூடிய  மழை  பெய்ய வாய்ப்பு உள்ளது

கர்நாடக தென் கிழக்கு மாவட்டங்களான பெங்களூரு மற்றும் சுற்றுப்வட்டார பகுதிகள் , மண்டியா நகர், இந்துபூர் மற்றும் மதனப்பள்ளி மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஆந்திராவின் தென்மேற்கு உள்மாவட்டங்களான சித்தூர், திருப்பதி கர்னூல், ஹைதராபாத் வரை மிதமான முதல் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை எதிர்பார்க்கலாம்

வெப்பச்சலனம் காரணமாக வரக்கூடிய இந்த மழையால் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லாமலும் இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார்

அதே போன்று சென்னையை பொறுத்த வரையில் கடலோரப் பகுதிகளில் மட்டுமே லேசான  சாரல் மழை உணரமுடியும் என்றும் தெரிவித்து உள்ளார். 

வெப்ப சலனம் காரணமாக வரக்கூடிய இந்த மழை வரும் 6-ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரையில் எதிர்பார்க்கலாம். குறிப்பாக இரவு நேரத்திலும், விடியற்காலை நேரங்களிலும், ஒரு சில நேரத்தில் காலை வேளையிலும் மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்து உள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்