"மனம் ஆறுதல் அடையலாம்" அவ்வளவுதான்..! தங்கம் விலை சற்று குறைவு..!

By ezhil mozhiFirst Published Jan 7, 2020, 11:44 AM IST
Highlights

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த  நிலையில், கிராமுக்கு ரூ. 53 குறைந்து 3843.00 ரூபாயாகவும், சவரனுக்கு 424 குறைந்து 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

 "மனம் ஆறுதல் அடையலாம்" அவ்வளவுதான்..! தங்கம் விலை சற்று குறைவு..!

புத்தாண்டு பிறந்தவுடன் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூபாய் 31 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.இந்த நிலையில் மனதிற்கு சற்று ஆறுதல் தரும் வகையில் இன்று கிராமுக்கு ரூ.53 குறைந்து  உள்ளது.

உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய மந்தமான சூழ்நிலை, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல் (ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ) மேலும் மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே திடீர் விலை உயர்வதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த  நிலையில், கிராமுக்கு ரூ. 53 குறைந்து 3843.00 ரூபாயாகவும், சவரனுக்கு 424 குறைந்து 30 ஆயிரத்து 744 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி ரூ.1.20 குறைந்து 51.00 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி என சேர்த்து மொத்தம் 36 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். 

click me!