உங்கள் பெண் சிறுவயதிலேயே பூப்படைந்து விட்டாளா..? .....ஏன் .....?

 
Published : Oct 07, 2016, 05:44 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
உங்கள் பெண் சிறுவயதிலேயே பூப்படைந்து விட்டாளா..? .....ஏன் .....?

சுருக்கம்

முன்பெல்லாம்  பெண் குழந்தைகள்,  14, 16  வயதுகளில் பூப்பெயர்ந்தனர்.  ஆனால்  தற்போதைய  காலகட்டத்தில், 8,9  வயதுகளிலேயே  பூப் பெயர்கிறார்கள் .

இதற்கு  என்னதான்  காரணமாம்?

மரபும்  ஒரு காரணம்

மாறிவரும் உணவு  பழக்க வழக்கங்கள், அதாவது  சத்தான  உணவு  வகைகளை  நாம்  குழந்தைகளுக்கு  தருவதில்லை.

அதற்கு  பதிலாக, ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் வகைகளை    அதிகம் விரும்பி உண்பதால்  . கொழுப்பு உடலில் சேர்ந்து, ஹார்மோன்கள் சீராக இயங்காமல் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polysistic Ovary Syndrome) நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதனால்,  மாதவிடாய்  பிரச்னை  ஏற்படுகிறது.

இதுமட்டுமில்லாமல்,   சில சமயத்தில் வயதிற்கு உண்டான  அளவை விட , அதிகமான  மன அழுத்தத்திற்கு  உள்ளாகும் சில  பெண்  குழந்தைகள்  மிக விரைவில்  பூப் பெயர்கிறார்கள் .

இதற்கு  என்ன  மாற்று :

இனிப்பு, கொழுப்பு உணவுகள் தவிர்த்து, பச்சை  காய்கறிகள்,  பருப்பு  வகைகள்,  பழங்கள் என  நல்ல  சத்தான உணவுகளை  வழங்க  வேண்டும்.

எளிமையான  உடற்பயிற்சிகள்,  ஓடி ஆடி  விளையாடும்  இயற்கையான  விளையாட்டு, யோகா  உள்ளிட்ட அனைத்தையும்  குழந்தைகளுக்கு  பழகி விட வேண்டும்.

எப்பொழுதும்,  எந்த மன  அழுத்தமும்,  பதற்றமும்  இல்லாத  ஒரு அமைதியான   சூழலில்  அவர்களை வைத்து கொள்ள வேண்டும்.   

கவனத்திற்கு :

 அதிக  விலையில்  வெளியில்  கிடைக்கும்  நேப்கீன்களை பயன்படுத்துவதை விட, இயற்கையான காட்டனால் தயாரிக்கப்படும் ஆனயானிக்(Anionic) நேப்கின்கள் பயன்படுத்துவது  மிக சிறந்தது.

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க
Explained: 100 நாள் வேலை திட்டம் ரத்து..! கிராமப்புற மக்களுக்கு ஜாக்பாட்..! புதிய திட்டத்தில் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன..?