
தீபாவளி நெருங்க நெருங்க , பட்டாசு தயாரிப்பில் மும்முரம் காட்டுகிறது பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள்........
தீபாவளி என்றாலே பட்டாசு, பட்டாசு என்றாலே சிறுவர்கள் என , தங்கள் பார்வையை சிறுவர்கள் மீது வைத்துள்ளனர் .....பட்டாசு நிறுவனங்கள்......!
அதன்படி தற்போது, சிறுவர்களின் மனத்தை கொள்ளை அடிக்கும் விதமாக பல அட்டகாசமான , வடிவங்களில் பட்டாசுகளை தயாரித்து வருகிறது சில பட்டாசு நிறுவனங்கள் .........!!!
முன்பெல்லாம் ஊசி பட்டாசு, மிளகாய் பட்டாசு , சுறு சுறா........என சொல்லும் காலம் சென்று தற்போது, வாட்ஸ் ஆப் பட்டாசு, கூகிள் பட்டாசு, யாஹூ பட்டாசு என........ விஞ்ஞான வளர்ச்சியில் ......பட்டாசின் பெயர்கள் கூட பிரபல இணைய தளத்தின் பெயரிலும், பிரபல வீடியோ கேம்ஸ் பெயரிலும் தற்போது பட்டாசுகள் ...தயாரிக்கப்பட்டு வருகிறது,
இந்த வருட தீபாவளிக்கு , இதுபோன்ற பட்டாசுகள் சிறுவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்பதால், இந்த வகையான பட்டாசுகளின் விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பாரக்கபடுகிறது...
அதாவது, சிறுவர்களை கவரும் வகையில் சமுதாய வலைதளங்களில் பெயர்களில், பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற பெயர்களில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை கொண்ட ஆங்கிரி பேட்ஸ், கிளாஸ் ஆப், கிளான்ஸ், தண்டர்பேடு, லூனி டியூன்ஸ் போன்ற பட்டாசு ரகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டார் ரெயின் பவர் ரெயின், ஹெடெக், ஸ்பிரிங் டிராகன், ருட்டோ, டாம் அண்ட் செர்ரி, மேஜிக்பாப், மைபாட், பைரோ டாப், பாப்கான், டிடு, கோகி டிரிம், யாகூ பவுன்டென், சூப்பர் மேன்,ஐயன்மேன், ஐகான், பவர்ரெயின், விலிக்கர், பீகாக், அல்க் என மொத்தம் 32 புதிய ரக பட்டாசுகள் சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் போன்ற வடிவங்களில் வந்துள்ளன.
சோ, இந்த வருட தீபாவளி , சமூக வலைதள தீபாவளிதான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை ..............
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.