ரகசிய கேமரா வைத்தால்.....உரிமம் ரத்து !!!

 
Published : Oct 06, 2016, 08:09 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
ரகசிய கேமரா வைத்தால்.....உரிமம் ரத்து !!!

சுருக்கம்

சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறை, ஹோட்டல்களின் படுக்கை அறை, தங்கும் விடுதிகளின் குளியல் அறைகளில், உளவு பார்ப்பதற்காகவோ, வக்கிர எண்ணங்களுடனோ ரகசிய கேமராக்களை வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கேற்றார் போல், நிரூபிக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன் கோவாவில் ஜவுளிக் கடை ஒன்றுக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அங்கு உடை மாற்றச் சென்றபோது அங்கு ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று , சட்ட  விரோதமாக  ரகசிய  கேமராவை  வைத்து, அதன் மூலம்  பெறப்படும் வீடியோக்களை, சமூக  வலைதளங்களில் பரவ  விடுவது அதிகரித்து  வருகிறது. இதனால், பல  குற்றச்சாட்டுகளும், அவமானத்தால்  தற்கொலை செய்து கொள்வதும்  அதிகரித்து வருகிறது.

எனவே, இது போன்று, உள் நோக்கத்தோடு ரகசிய கேமரா பொருத்தி வாடிக்கையாளர்கள், பணியாளர்களை படம் பிடித்தால் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை, தங்கும் விடுதி, ஹோட்டல்கள் ஆகியவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று தியாகராய நகர் உதவி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்