
வாயு தொல்லைக்கு உகந்த பூண்டு கஞ்சி
வயிற்று வலி, வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த பூண்டு கஞ்சியை அடிக்கடி செய்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பூண்டு - 150 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
காய்ச்சிய பால் - 1 கப்
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.
பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.அத்துடன் பூண்டு பற்களை கொட்டி வதக்க வேண்டும்.
பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விட வேண்டும்.
சாதம் நன்றாக வெந்ததும் அதனை மசித்து விட்டு பால் கலந்து பருகவும்
இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக வாயு தொல்லையிலிருந்து விடுபடலாம்..அதுமட்டும் இல்லாமல் வயிற்ருப் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதிலிருந்து எளிதாக விடுபடலாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.