இலவச ஸ்கேட்டிங் பயிற்சி... பாமரர் வீட்டுப் பிள்ளைக்களுக்கும் எட்டிய பணக்கார விளையாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Feb 22, 2020, 5:39 PM IST
Highlights

இனி பாமரன் வீட்டுப்பிள்ளைகளும் உற்சாக வானில் ஊர்ந்து செல்லலாம் என்பதை செயல்படுத்தி வருகிறது. 

காலில் சக்கரங்களை மாட்டிக் கொண்டு பறக்கும்போது மனதில் ஏற்படுகின்ற ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி, மகிழ்ச்சி போன்றவை வேறு எந்த வேலையிலும், விளையாட்டிலும் நமக்கு ஏற்படாது. அந்த உணர்வை நமக்கு தரும் ஒரே விளையாட்டு ஸ்கேட்டிங். பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் இந்த விளையாட்டு என்பதை இப்போது ஒரு தனியார் நிறுவனம் உடத்தெறிந்து வருகிறது. இனி பாமரன் வீட்டுப்பிள்ளைகளும் உற்சாக வானில் ஊர்ந்து செல்லலாம் என்பதை செயல்படுத்தி வருகிறது. 

பொதுவாக ஸ்டேட்டிங் விளையாட்டில் பயிற்சியில் இணைய வேண்டும் என்றால் முதலில் அதற்காக உபகரணங்கள் என அனைத்தும் சேர்த்து குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கறந்து விடிவார்கள். அடுத்து மாதம்தோறும் பயிற்சி கட்டணமே ரூ.2500க்கும் குறையாமல் இருக்கும். ஆனால், போரூர் மாநகராட்சி பூங்காவிற்குள் தனியார் நிறுவனம் நடத்தும் ஸ்கேட்டிங் பயிற்சி அளித்து வருகிறது. அங்கு மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் பெறாமல் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.

 

பிற பள்ளி ஏழை மாணவர்களிடம் மாதம் வெறும் ரூ.500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் ஆரம்பத்தில் சேரும்போது உபரகரணங்கள் உட்பட அனைத்தும் மொத்தமாக சேர்த்து மிகக் குறைந்த கட்டணமாக ரூ.2,500 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால், ஆர்வமுடன் பல மாணவர்கள் பயிற்சி பெற வருகிறார்கள். சேவை மனப்பான்மையுடன் இந்தப்பயிற்சியை அளித்து வரும் அந்த தனியார் நிறுவனத்திற்கு வரவேற்பும் அதிகரித்து வருகிறது.   

ஆக, இனி சாமானியர் வீட்டுப்பிள்ளைகளும் விளையாட்டில் சறுக்கலாம்... சாதிக்கலாம்...!

click me!