விரைவில் இலவச இன்டர்நெட் : ரொக்கமில்லா பண பரிவர்த்தனை ஊக்குவிக்க “டிராய்” அதிரடி ...!!!  

 
Published : Dec 20, 2016, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
விரைவில் இலவச இன்டர்நெட் : ரொக்கமில்லா பண பரிவர்த்தனை ஊக்குவிக்க “டிராய்” அதிரடி ...!!!  

சுருக்கம்

விரைவில் இலவச இன்டர்நெட் : ரொக்கமில்லா பண பரிவர்த்தனை ஊக்குவிக்க “டிராய்” அதிரடி ...!!!  

பழைய 500,1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது  என்ற, பிரதமரின் அதிரடி அறிவிப்புக்கு பின், இந்தியாவில்   ரொக்கமில்லா பரிவர்த்தனையை  ஊக்குவிக்க, இலவச  இன்டர்நெட் வழங்க வேண்டும்  என , தொலைதொடர்பு  ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை  செய்துள்ளது.

அதன்படி,  ரொக்கமில்லா  பரிவர்த்தனையை  அதிகரிக்கும் பொருட்டு,  நிதியமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து தேசிய அளிவிலான  கான்பரன்ஸ் ஒன்றை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளது.  

இந்த  கான்பரன்ஸ் முடிந்த  பின்பு,  நாடு  முழுவதும்   உள்ள  சுமார்  ஒரு   கோடி பேருக்கு ,ரொக்கமில்லா  பரிவர்த்தனை  செய்வது எப்படி என்பது  குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்த , வகுப்பு  எடுக்கப்படும் என  தெரிவிக்கபட்டுள்ளது.

தற்போது   டிஜிட்டல் இந்தியாவை   நோக்கி  நாம் பயணம்  செய்து கொண்டிருப்பதால்,  கிராம மக்கள் கூட  , டெபிட் கார்ட், கிரெடிட்  கார்டு  வசதியை பயன்படுத்தும்  வகையில் , அவர்களுக்கு  இலவச  இணைய  சேவையை  வழங்க  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ,மற்ற  தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பரிந்துரை  செய்துள்ளது.

எனவே,  இனி  வரும் காலங்களில்  அனைவரும் , ஸ்வைப்  மெஷின் பயன்பாடு  அதகரிக்கும் என்பதில்  எந்த  மாற்றமும்  இருக்காது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்