இந்த 4 விஷயத்தை கடைபிடிங்க தூக்கம் செமயா வரும்.. ஒரு நல்ல தூக்கம் தான் சிறந்த மனிதனை உண்டாகுமாம்!

By Ansgar R  |  First Published Jul 21, 2023, 7:06 PM IST

ஒரு நல்ல தூக்கம் ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும் அதிக வல்லமை கொண்டது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?


தூக்கம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் இந்த நான்கு விஷயங்களை கடைப்பிடித்தால் அவர்களுக்கு தூக்கத்தில் உள்ள பிரச்சனை பெரிய அளவில் தீரும் என்று ஆய்வுகள் கூறுகிறது. வாருங்கள் அது குறித்து விளக்கமாக காணலாம்.

Tap to resize

Latest Videos

நேர மேலாண்மை.. அதாவது டைம் மேனேஜ்மென்ட் என்று இதை அழைப்பார்கள். நல்ல தூக்கம் வருவதற்கு இதை நிச்சயம் நீங்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டும். தினமும் உறங்கு செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை பயன்படுத்துங்கள். அது இரவு 10 மணிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள், தினமும் ஒரு நேரத்தில் தூங்கி ஒரு நேரத்தில் எழ பழகி விட்டால், நிச்சயம் அது உங்களுக்கு மிக மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும்.

கட்டிப்புடி வைத்தியம் உண்மையிலே ஒர்க் அவுட் ஆகுமா? Hugs தரும் நன்மைகள் என்ன? ஒரு பார்வை!

செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை நீங்கள் தூங்குவதற்கு 30 முதல் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பயன்படுத்தி முடித்து விடுங்கள். முடிந்தால் அதை உங்கள் அருகாமையிலேயே வைத்துக் கொள்ளாமல், அடுத்த அறையில் வைத்து விட்டு நிம்மதியாக உறங்குவது நல்லது. ஆரம்பத்தில் பக்கத்தில் ஒரு அலாரம் மட்டும் இருந்தாலே போதுமானது.அது நேரத்திற்கு எழுந்திரிக்கமட்டுமல்ல, சரியான நேரத்திற்கு தூங்கவும் பயன்படுத்துங்கள்.

டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற தூக்கத்தை தள்ளிப் போட வைக்கும் பானங்களை இரவு நேரங்களில் அருந்துவதையும், வயிறு முட்ட உணவு உண்டு விட்டு உறங்க செல்வதையும் சுத்தமாக நிறுத்தி விட்டால் உறக்கம் உங்களை தானாக தேடி வரும்.

நான்காவது மற்றும் மிக முக்கியமான பகுதி இதுதான், தேவையற்ற சிந்தனைகள் நாம் அதிகம் சிந்திப்பதனால் நமக்கு இருக்கும் குறைகளோ, பிரச்சனைகளோ தீர்ந்து விடப்போவதில்லை. ஆனால் ஒரு நல்ல உறக்கம், அவை அனைத்தையும் சமாளிக்கவும், மீண்டு செல்ல தேவையான உடல் மற்றும் உள்ளவளுவை அளிக்கிறது.

ஒரு மனிதன் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும், அவன் அப்படி ஓய்வெடுக்கும் பொழுது உடலில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த உடல் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொள்ள, அதற்கு சரியான நேரம் கிடைக்கிறது. கண்களுக்கு அமைதி கிடைக்கிறது, இருதயத்திற்கு அமைதி கிடைக்கிறது, மூளைக்கு அமைதி கிடைக்கிறது, நம் கை கால்களுக்கு அமைதி கிடைக்கிறது. ஆகையால் ஒரு நல்ல உறக்கத்தை உங்களுடைய பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதனாக அது உங்களை உருவாக்கும்.

செக்ஸ்டார்சன் என்றால் என்ன? எவ்வாறு பெண்கள் ஏமாற்றப்படுவார்கள்?

click me!