செக்ஸ்டார்சன் என்றால் என்ன? எவ்வாறு பெண்கள் ஏமாற்றப்படுவார்கள்?
இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், குற்றத்தை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது.
Sextortion என்பது கேட்டதை நீங்கள் செய்யவில்லை என்றால் உங்களின் அந்தரங்க விவரங்கள், பாலியல் படங்கள் அல்லது வீடியோக்களை ஆன்லைனில் பகிர்வதாக யாராவது உங்களை அச்சுறுத்துவதாகும். பணம் பெறுவதற்கு, பாலியல் அத்துமீறலுக்கு, அதிக நிர்வாண புகைப்படங்கள் பெறுவதற்கு அல்லது வேறு ஏதாவது ஒன்றைப் பெறுவதற்கு இதைச் செய்யலாம்.
இந்த துஷ்பிரயோக செயல்கள் உங்களுக்குத் தெரிந்தவர் அல்லது ஆன்லைனில் நீங்கள் சந்தித்த நபர்களிடம் இருந்து வரலாம். உங்களது வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இந்த சதிக்கு பெண்கள், சிறு வயது பெண்கள், குழந்தைகளை அதிகம் இலக்காக கொண்டிருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
கட்டிப்புடி வைத்தியம் உண்மையிலே ஒர்க் அவுட் ஆகுமா? Hugs தரும் நன்மைகள் என்ன? ஒரு பார்வை!
பாலியல் பலாத்காரம் ஒரு கடுமையான குற்றம். அதன் அறிகுறிகளைக் கண்டறிந்து, புகாரளித்து, எப்படி பெண்களை காப்பாற்றலாம் என்று இங்கே பார்க்கலாம்.
Sextortion எப்படி வேலை செய்கிறது?
செக்ஸ்டார்சன் என்பது பிளாக்மெயில் செய்வதற்கு முன்பு ஒருவரை பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு தங்கள் வசம் செய்யும் வேலைகள் நடக்கலாம். எடுத்துக்காட்டாக, டேட்டிங், சமூக ஊடகம் அல்லது கேமிங் பயன்பாட்டில் உங்களுக்கு கோரிக்கை வரலாம். உங்களுடன் ஊர் சுற்ற விரும்புவது, மிகவும் நட்பாக இருப்பது அல்லது உங்களுடன் உறவைத் தொடங்க ஆர்வம் காட்டுவது போன்ற ஒருவரை நீங்கள் ஆன்லைனில் சந்திக்கலாம். அவர்கள் பெரும்பாலும் போலி அடையாளத்தைப் பயன்படுத்துவார்கள்.
வழக்கமான உடலுறவால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்குமாம்.. என்னென்ன தெரியுமா?
நீங்கள் அவர்களை முழுவதும் நம்பும்போது, நிர்வாண செல்ஃபிகள் உட்பட பாலியல் படங்கள் எடுப்பதற்கு உங்களை வற்புறுத்தலாம். இதற்காக உங்களை கோரலாம், கட்டாயப்படுத்தலாம். சில சமயங்களில், லைவ் வெப்கேமரா முன்பு பாலியல் செயல்களை செய்யும்படி உங்களிடம் கேட்கலாம். மேலும் உங்கள் அனுமதியின்றி அவர்கள் உங்களை பதிவு செய்யலாம்.
இதுமாதிரியான புகைப்படங்களை எடுத்த பின்னர் உங்களது குடும்பத்தினருடன் அல்லது குடும்ப நண்பர்களுடன் அல்லது ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டுவார்கள். பணம் அல்லது பாலியல் உதவி போன்றவற்றை பெறுவதற்காக இதுபோன்ற அச்சுறுத்தல்களை கொடுப்பார்கள்.
இந்த செயல்களை குற்றவாளிகள் ஒரு குழுவாக அல்லது இதற்கு என்றே அமைக்கப்பட்ட குழுவைக் கொண்டு செய்வார்கள். இவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் இந்த பாலியல் மோசடிகளை செய்வார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கு நடந்தாலும், நீங்கள் அவமானப்பட்டு, பயப்பட்டு, தனிமைக்கு செல்லலாம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் பயப்படாமல் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் கூறுங்கள். முடிந்த வரைக்கும் உங்களது சகோதரிகள், சகோதரர்கள், பெற்றோரிடம் கூறுங்கள்.
காணாமல் போன மற்றும் ஏமாற்றப்படும் குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் அறிக்கையின்படி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மோசடியில் ஈடுபவர்கள் அதிக பாலியல் உதவிகள், புகைப்படங்களைக் காட்டிலும் பணத்தை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.