
விமானத்தை ஓட்ட வருகிறது ரோபோ ......!!!
விமானத்தில் எப்பொழுதும் இரண்டு பைலட்கள் இருப்பார்கள்...இதிலும் இப்பொழுது சின்ன மாற்றம் வர போகுது .........
அதாவது, இரண்டு பைலட்கள் உள்ள விமானங்களில் இரண்டாவது பைலட்டுக்கு பதிலாக ரோபோட்களை நியமிக்க அமெரிக்கவைச் சேர்ந்த விமான ஆராய்ச்சி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது
.அமெரிக்காவின் வெர்சினா மாகாணத்திலுள்ள ஏர்போர்ட்டில், நேற்று முன்தினம், இரண்டு பைலட்கள் உள்ள விமானத்தில், பதிலாக ரோபோட்களை விமானத்தை சோதனை முறையில் ஓட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க செய்தனர்.
இந்த திட்டத்திற்கு , ஏர்குரூ லேபர் இன்-குக்பிட் ஆட்டோமேசன் சிஸ்டம் (Aircrew Labor In-Cockpit Automation System or ALIA) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்க அரசும், அங்குள்ள நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலை தொடர்ந்தால்,, வருங்காலங்களில் விமானங்கள் , ஹெலிகாப்டர்கள் போன்றவைகள் ரோபோக்கள் மூலம் செயல்பாட்டுக்கு வரும் என்று ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.