
இளவரசருக்கே மரணதண்டனை விதித்த சவூதி அரசு .....!!!
சவூதி அரேபியாவில் கடுமையான சட்டம் அமலில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதற்கு சாட்சியாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சவூதி அரேபியாவில், அரச குடும்பத்தை சார்ந்த இளவரசர் ஒருவருக்கு
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.அதாவது, துர்கி பின் சவூத் அல் கபீர் என்ற இளவரசரே தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், கடந்த 2014ம் ஆண்டு தனது நண்பர் ஒருவரிடம் மோதலில் ஈடுபட்டு, அவரை சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, இளவரசர் கபீருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீண்ட பரிசீலனைக்குப் பின்னர், தற்போது மரண தண்டனையை சவூதி அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை, மொத்தம் 134 பேருக்கு, சவூதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, அரச குடும்பத்தின் வாரிசையும் விடாமல், தண்டனையை நிறைவேற்றியதன் மூலமாக, சர்வதேச அளவில், நீதி மற்றும் மனித மாண்பை காக்கும் அரசாக, சவூதி அரேபியா உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது என்பதை இந்த மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.