
“யாரையும் நாங்கள் ஏமாற்றவில்லை”…….ஜியோ விளக்கம்
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் அறிவித்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஜியோ சிம் பயன்படுத்துவோர், சில குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஜியோ சிம் வாங்க ஷோ ரூம் சென்றால், அங்கு ஜியோ சிம் பெறுவதற்கு , பணம் வசூலிக்க படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.........
இந்நிலையில், ஜியோவின் இந்த சிறப்பு சலுகைகாக இதுவரை ரூ. 2.5 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில், ரிலையன்ஸ் நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்தது எனபது உண்மை தான் , ஆனால் இந்த சிக்கல் தொடர்ந்து நீடிக்காது என தெரிவித்தார்
“ரிலையன்ஸ் ஜியோ வின் சேவை , வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் என்பதில் தான் உள்ளது என்றும், “யாரையும் ஏமாற்றம் செய்வதற்கு அல்ல “ எனவும் தெரிவித்தார் முகேஷ் அம்பானி ....
எத்தனை சிக்கல் வந்தாலும் வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் தான் இருக்கும் என்று கூறினார். இந்த திட்டத்தில் அதிக முதலீடு செய்துள்ளதால்,4 ஜி சேவையை சிறப்பாக வழங்க முடியும் என மேலும் அவர் குறிப்பிட்டார் ....
மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் சார்ந்த நிறுவனம், படிப்படியாக டிஜிட்டல் சேவையை அதிகரிபதாகவும், மீடியா மற்றும் எண்டெர்டயின்மெண்ட் மற்றும் சில்லரை வர்த்தகத்தில் தொடர்ந்த்து ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதே சமயத்தில், அடுத்த சில ஆண்டுகளில் மின் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இருக்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக விரைவில் இந்தியாவை “ டிஜிட்டல் இந்தியாவாக “மாற்ற முடியும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் .
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.