
Summer Camp In Goa: கோடைகாலத்தில் கூட கோவா திருவிழா கோலம்தான் பூண்டிருக்கும். நிறைய பேரோட மோஸ்ட் ஃபேவரைட் டெஸ்டினேஷன் இதுதான். வெளிநாட்டுல இருந்து கூட நிறைய டூரிஸ்ட்ஸ் இங்க வருவாங்க. ஆனா, வருஷத்தோட கடைசி மாசத்துலையும் கோடை விடுமுறை காலத்திலேயேும் இங்க தங்குறதுக்கும், சாப்பிடுறதுக்கும் செலவு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஏன்னா, அந்த அளவுக்கு கூட்டம் இருக்கும்.
புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு நீங்க Baga, Calangute, Anjuna, Vagator பீச்களுக்குப் போகலாம். இங்க லைவ் DJ, பட்டாசு வெடி, மிட்நைட் கவுண்ட்டவுன்னு செமயா இருக்கும். ஆனா ஒன்னு, எந்த பார் இல்ல ரெஸ்டாரன்ட் போனாலும் முன்னாடியே புக் பண்ணிடுங்க. ஏன்னா, கூட்டம் அள்ளும். அதேபோல் இந்த கடற்கரைகள் கோடைகாலத்திலும் களைகட்டும் என்பதால் முன்கூட்டியே புங்கிங் செய்ய வேண்டியது அவசியம்.
காலையில சூரிய உதயத்தைப் பார்க்க Morjim, Ashwem, Mandrem பீச்களுக்குப் போகலாம். இந்த இடங்கள் ரொம்ப அமைதியா, அழகா இருக்கும். சாயங்காலம் சூரியன் மறையுறதையும், மியூசிக் வைபையும் என்ஜாய் பண்ண Arjuna, Vagator பீச்கள் சரியான சாய்ஸ். போட்டோ, ரீல்ஸ் எடுக்க இதுதான் பெஸ்ட் டைம்.
ஒரு நாள் முழுக்க வாட்டர் ஸ்போர்ட்ஸ்க்கு ஒதுக்குங்க. Parasailing, Jet Ski, Banana Ride, Scuba Divingனு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. Baga, Candolim பீச்கள்ல வாட்டர் ஸ்போர்ட்ஸ்க்கு நல்ல வசதிகள் இருக்கு. ஒரு முக்கியமான விஷயம், நியூ இயர் டைம்ங்கிறதால ரேட் கொஞ்சம் அதிகமா இருக்கும். பேரம் பேசி குறைக்க ட்ரை பண்ணுங்க.
கோவா ட்ரிப் போயிட்டு அங்க உள்ள ஸ்பெஷல் சாப்பாட்டையும், கஃபேக்களையும் மிஸ் பண்ணா எப்படி? ஃபிஷ் கறி ரைஸ், பிரான் பால்சாவ், பெபிங்கா போன்ற பாரம்பரிய கோவா உணவுகளை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. Curlies, Thalassa, Gunpowder, Baba Au Rhum போன்ற பிரபலமான கஃபேக்கள், அதோட சாப்பாடு, மியூசிக், கொண்டாட்டமான சூழலுக்கு பெயர் போனவை. நியூ இயருக்காக இங்க ஸ்பெஷல் மெனுவும் இருக்கும்.
கோவால இருக்குற சர்ச், பாரம்பரிய இடங்களுக்குப் போறது ஒரு தனி அனுபவத்தைக் கொடுக்கும். ஓல்ட் கோவால இருக்குற Basilica of Bom Jesus சர்ச்ல கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டங்கள், அலங்காரங்கள்னு ரொம்ப அழகா இருக்கும். அதேபோல, Fontainhas (லேட்டின் குவார்ட்டர்) பகுதியோட கலர்ஃபுல் தெருக்கள், பழைய வீடுகள் எல்லாம் கோவாவோட பாரம்பரியத்தைக் காட்டும்.
கோவாவோட நைட் மார்க்கெட், ஸ்ட்ரீட் ஷாப்பிங் செமயா இருக்கும். Anjuna Flea Market, Arpora Night Market ரெண்டும் ரொம்ப பாப்புலர். இங்க போஹோ ஸ்டைல் உடைகள், கையால் செய்யப்பட்ட நகைகள், வித்தியாசமான நினைவுப் பொருட்கள்னு நிறைய வாங்கலாம். கூடவே லைவ் மியூசிக், ஃபுட் ஸ்டால்ஸ்னு கொண்டாட்டமா இருக்கும்.
கூட்ட நெரிசல் வேணாம், அமைதியா கொண்டாடணும்னு நினைச்சீங்கன்னா, சவுத் கோவாதான் பெஸ்ட் ஆப்ஷன். Colva, Benaulim, Palolem போன்ற பீச்கள் அமைதியான சூழலுக்கும், இயற்கை அழகுக்கும் பெயர் போனவை. இங்க யோகா, ஸ்பா, பீச் ஷேக் டைனிங்னு ரிலாக்ஸா நியூ இயரைக் கொண்டாடலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.