
தண்ணீரில் மிதக்கும் முதல் ஸ்மார்ட் போன்.....”உலக சாதனை படைத்த பெங்களூர் பிராஷாந்த் ராஜ் உர்ஸ்”
எத்தனையோ முன்னனி நிறுவனங்கள் , ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து வந்தாலும், இது போன்ற பெரிய சாதனை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
அதாவது, உலகிலேய , தண்ணீரில் மிதக்கும் முதல் ஸ்மார்ட் போனை , பெங்களூரை சேர்ந்த இளைஞர் பிராஷாந்த் ராஜ் உர்ஸ், பெரும் முயற்சியின் விளைவாக, இந்த சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் நிதி உதவியை பயன்படுத்தி, தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறார்ன் இவர்.
தற்பொழுது, இந்த ஸ்மார்ட் போனை பற்றிய தாக்கம் மக்களிடையே ஏற்பட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, இப்போதே தனியாக முன்பதிவு செய்துகொள்ள தொடங்கி உள்ளனர் நம் மக்கள். இதன் ஆரம்ப விலை ரூ. 16,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போனின் சிறப்பம்சம் :
4.7 இன்ச் தொடுதிரை,
16 மெகா பிக்சல் பின்புற கேமிரா,
4ஜிபி ரேம்,
2ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் புராஸசர் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ள இந்த போனுக்கு, இண்டிகோகோ எனப் பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.